ஹிந்தி எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஒரு புறம் இருக்கட்டும். சுதந்திரத்திற்கு முன்னரே வங்க மொழி பேசும் பெருபான்மையினரிடமிருந்து ஒரிய மொழி பேசும் ஒரிசா 1895 ஆம் வருடத்திலேயே தனி மாநிலமாக கோரிக்கை வைத்து போராடி வெற்றி பெற்றது. சுதந்திரம் வாங்கிய பின்னர் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் 16 மாவட்டங்கள் ஆந்திரா மாநிலம் என்று கோரிக்கை வைத்து போராடி வெற்றி பெற்றனர். அன்றைய மெட்ராஸ் மாகாண மாநில ஆட்சி மொழி, பள்ளிக்கூட பயிற்று மொழி தெலுங்கு ! தமிழ் அல்ல. !! 1953 வருடம் ஆந்திர மாநிலம் உருவாக்கியது. அப்போது சௌராஷ்ட்ரா பகுதி எந்த மாநிலத்தில் இடம் பெற்று இருந்தது ? பம்பாய் மாகாணம் அல்லது சவுராஷ்டிரா மாகாணம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் ஒன்றிணைந்த பகுதி . அப்போது பம்பாய் மாகாணத்திற்கு எந்த மொழி பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால் காங்கிரஸாரின் பேராசை, பம்பாய் மாகாணம் (எ) சௌராஷ்ட்ரா மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஒன்று மஹாராஷ்ட்ரி பேசும் மகாராஷ்டிரா மற்றொன்று குஜராத். பம்பாய் மாகாணம் ஒரு பொது மொழியை கொண்டு, சௌராஷ்ட்ரா போன்று பல வட்டார வழக்கு மொழிகளை ஒன்றிணைத்து நிர்வாகம் செய்து வந்தது. ஆனால் 1956 இல் குஜராத் காங்கிரசார் தனி மாநில கோரிக்கையை மொழி அடிப்படையில் வைத்தனர். அப்போது தான் குஜராத்தி மொழி வேகமாக பரப்பப்பட்டது. பல வட்டார சிறு சிறு மொழிகள் பேசுவோர், குஜராத்தி மொழி பேசுமாறு " மஹாகுஜராத் " இயக்கம் வலியுறுத்தியது. இதில் என்ன பேராசை என்று நீங்கள் யோசிக்கலாம். இங்கே பிரச்னை மொழி அல்ல, பணம் !!! எப்படி என்று கேட்கிறீர்களா ? சௌ. மாகாணம் (எ ) பம்பாய் மாகாண தலை நகர் பம்பாய் . தலை நகர் பம்பாய் அருகில் வசிக்கும் மகாராஷ்டிரா பகுதி காங் . கட்சி அரசியல்வாதிகள் அரசினால் ஆக வேண்டிய காரியங்களை செவ்வனே சாதித்து வந்தார்கள். குஜராத்தில் இருந்து பம்பாய் செல்ல குஜராத், சவுராஷ்டிரா, கட்ச் பகுதி காங். அரசியல் வாதிகளுக்கு பெரும் நேரம் செலவு, தங்கள் காரியமும் சாதிக்க இயலவில்லை ! காங். கட்சியினருக்குள்ளேயே பிளவு. அரசு சலுகைகள் பெற போட்டாபோட்டி !! இதனால் " மொழிவாரி மாநில அரசியலை " கையில் எடுத்தனர் குஜராத் பகுதியினர். சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தி சௌராஷ்ட்ரா பகுதிக்காரராக இருந்தது ஒரு முக்கிய காரணம், “ சுதந்திரம் வாங்கி கொடுத்தது நம்மூர் தலைவர், ஆனால் அரசு காரியங்களை தங்களுக்கு சாதகமாக்கி வருமானம் பார்ப்பது தலைநகர் பம்பாய் அருகில் இருக்கும் காங். தலைவர்கள் ! ” - என்ற பொறாமைதான் குஜராத் பகுதியை சேர்ந்த காங். தலைவர்களின் தனி மாநில கோரிக்கையாக வடிவெடுத்தது. போராடியவர்கள் காங். கட்சியை சேர்ந்தவர்கள் அதுவும் காந்திக்கு நெருக்கமானவர்கள் என்பதால் நான்கே ஆண்டுகளில் 1960 இல் குஜராத் மாநிலம் பிறந்து விட்டது. அதுவரை உபோயகத்தில் இருந்த மொழியை அவசரம் அவசரமாக சீர்திருத்தி, தேவநாகரி எழுத்தின் ( ஹிந்தி எழுத்து என்றால் நமக்கு நன்கு தெரியும் ) மேல் இடப்படும் கோடு நீக்கப்பட்டு, அதுதான் " புதிய மஹாகுஜராத்-ன் எழுத்தாக ( சவுராஷ்டிரா, குஜராத், கட்ச் பகுதிகள்) அறிவிக்கப்பட்டது. அங்கிருந்த சவுராஷ்டிரா மக்கள் இந்த புதிய குஜராத்தி எழுத்தை ஏற்றுக்கொண்டனர். இது நம் தாய் மண்ணான சவுராஷ்ட்ராவில் நடந்த மொழி சம்பந்தமான நிகழ்வுகள். தமிழகத்தில் இருக்கும் நமக்கு இந்த நிகழ்வுகள் எட்டவில்லை. இந்த தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக தமிழக சௌராஷ்ட்ரர்கள் சிலர் " சௌராஷ்ட்ரா மொழிக்கு எழுத்து இல்லை " எனவே நான் சௌராஷ்டிர மொழிக்கு எழுத்து உருவாக்குவேன் என்று மொழி பிரச்சனைக்கு மேலும் தூபம் போட்டு உள்ளனர். இப்பொழுது நீங்கள் தமிழக சௌராஷ்ட்ரர்கள் என்ற அடிப்படையில் ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்று என்ன முடிவு எடுப்பீர்கள் ?
நேற்றைய
பதிவின் தொடர்ச்சி. ஹிந்தி எதிர்ப்பு அல்லது
ஆதரவு ஒரு பக்கம் இருக்கட்டும்.
" மஹாகுஜராத்" இயக்கம் வலியுறுத்தியபடி மொழிவாரியாக
குஜராத் மாநிலம் உருவாகி விட்டது. ஆளும்
காங். தலைவர்களே இதில் ஈடுபட்டதால் எளிதான
வெற்றி. இப்போது
ஓர் குழப்பம்... சௌராஷ்டிராவில் ஒரு மொழி, குஜராத்தில்
ஒரு மொழி, கட்ச் இல்
ஒரு மொழி என்று மூன்று
மொழிகளாக இருக்கும் குஜராத்தில் எந்த பகுதி மொழியை
மாநில மொழியாக அறிவிப்பது ? மீண்டும்
விவாதம் உருவாக்கியது.. உடன்படிக்கை ஏதும் ஏற்படும் வழி
வகை காணோம்.. மொழிக்கு தனி மாநிலம் என்று
போராட்டம் அறிவித்த பின்னர் 3 வட்டார வழக்கு மொழிகளில்
எதையும் மாநில மொழியாக அறிவிக்க
முடியவில்லை.. இறுதியாக 3 வட்டார மொழிகளில் எதுவும் யாருக்கும்
வேண்டாம்.. சௌராஷ்டிராவின் மலை பகுதியான கிர்நார்
மலைவாசிகளின் வட்டார வழக்கு மொழியை
குஜராத் மாநில பொது மொழியாக
அறிவிக்கலாம் என்று 3 (சௌராஷ்டிரா, குஜராத்,
கட்ச் மொழியினர் ) வட்டாரமும் இசைந்தன. மலைவாசியான
நரசிம்ம மேத்தா வின் இலக்கியத்தினை
அடிப்படையாக கொண்டு குஜராத்தி மொழி
எழுந்தது. பம்பாய்
மாகாணம் பிரிந்தபோது குஜராத் மாநிலத்தில் வாழும்
சௌ. மக்கள் “ மேலே கோடு இடப்படாத” தேவனாகரி எழுத்தையும்,
மஹாராஷ்டிரா பகுதியில் வாழும் சௌ. மக்கள்
தேவனாகரி எழுத்தை மாற்றம் இல்லாமலும்
உபயோகிக்க ஆரம்பித்தனர். இந்த
மொழி வாரி மாநில பிரிவினைக்கு
ஜனசங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.. ஆயின் நேரு ரஸ்யாவின்
ஆலோசனைப்படி இந்திய அரசியல்
அமைப்பு சட்டத்தில் 7வது அட்டவனையின் கீழ்
மொழிவாரி மாகாணம் என்ற திருத்தத்தை
மேற்கொண்டார். இறுதியில் பம்பாய் குஜராத்துக்கா அல்லது
மஹாராஷ்டிராவுக்கா என்ற போராட்டமும் நடந்தது. இறுதி
நிலை நாம் அனைவரும் அறிந்த
இன்று உள்ள நிலையே.. 2 சதவீதம்
(2%) கூட படித்தவர்கள் இல்லாத சூழ்நிலையில் குஜராத்தி
மற்றும் மராத்தி மொழி பயிற்றுவிப்பது
எதிர்ப்பு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு விட்டது. தமிழக
சௌ. மக்கள் பேசுவதும், பின்பற்றும்
முகலாயர் மற்றும் ஆஙகிலேயர் கால;
“ஜாதி அடிப்படை சமூகமாக” இல்லாமல் இருப்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.
ஹிந்தி
எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஒரு
புறம் இருக்கட்டும். நேற்றைய
பதிவின் தொடர்ச்சி ...... ஏன் நரசிம்ம மேத்தா
என்ற மலைவாசியின் இலக்கியங்கள் அடிப்படையில் மொழியை ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்?
"சௌராஷ்ட்ரா பகுதியின்
கிர்னர் மலை வட்டார மொழிவழக்கை"
மஹாகுஜராத் என்ற தனி குஜராத்
மாநிலம் கோரிய இயக்க குழுவினர்
ஏன் தேர்ந்து எடுத்தனர்.? அவருக்கு
ஒரு சிறப்பு அம்சம் இருந்தது. வேலை
தேடி மேற்கு வங்கத்தில் மில்
ஒன்றில் வேலை செய்து வந்தவர்
நரசிம்ம மேத்தா . அவர்
காலத்தில் தான் தாகூரின் இலக்கியத்திற்கு
நோபல் பரிசு கொடுக்கப்பட்டது அறிந்தார். தாகூரின்
இலக்கியங்கள் அவரின் சொந்த கற்பனை.
இப்படி இருக்க நமது பம்பாய்
மாகாணத்தில் பலப்பல " கின்னர் " எனப்படும் பாடகர்கள் தாமே இலக்கியங்களை இயற்றி
பாடுவார்கள். இவ்வளவு
ஏன் லைவ் ஆக இலக்கியம்
எழுதி பாடுவதும் வசனம் பேசுவது போன்ற
போட்டிகளும் நிறைந்த பம்பாய் மாகாணத்தில்
எவ்வளவு இலக்கியங்கள் நிறைந்து இருக்கின்றன. சௌராஷ்டிரா
வட்டார இலக்கியங்கள், குஜராத் வட்டார இலக்கியங்கள்,
கட்ச் வட்டார இலக்கியங்கள், .... அதன்
மதிப்பு நரசிம்ம மேத்தாவின் மனதில்
ஓடியது. உடனே
செய்து
வந்த மில் தொழிலாளி வேலையை ராஜினாமா செய்துவிட்டு,
பம்பாய் மாகாணம் முழுதும் வருடக்கணக்கில் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து இலக்கிய
தொகுப்பு பணியில் ஈடுபட்டார்.
ஒரே ஒரு தாகூரின் இலக்கியத்திற்க்கே
நோபல் பரிசு என்றால் பம்பாய்
மாநிலம் முழுதும் நிறைந்து இருக்கும் இலக்கியங்களுக்கு மிக மதிப்பு கிடைக்கும்
என்று தேடித்தேடி பலரிடமிருந்து கேட்டதை எழுதி வைத்துக்கொண்டார். அவரது
இன்னுமொரு சிறப்பு அம்சம், அவர்
தொகுத்த இலக்கியங்கள் பல வட்டார மொழிகளில்
இருந்ததை தனது சொந்த வட்டாரமான
கிர்நார் மொழி வழக்கில் எழுதி
வைத்தார். இதனாலேயே
அவரது இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு கிர்நார் மலை
வட்டார மொழியையே "குஜராத்தி மொழி" என பின்பற்றலாம்
என்று (1) சௌராஷ்டிரா பகுதி, (2) குஜராத் பகுதி, (3) கட்ச்
பகுதி போராட்ட குழுவினர் முடிவெடுத்தனர். தமிழகத்தில்
வாழும் சௌராஷ்ட்ரர்களான நமக்கு இந்த செய்திகளை
தினத்தந்தி மேலோட்டமாக குஜராத் மாநிலத்திற்க்கன போராட்டம்
என்று செய்தி வெளியிட்டதோடு நின்று
விட்டதால் நம் மக்களுக்கு மேற்படி
சம்பவங்கள் எட்டவில்லை. ஆனால்
கடவுள் கருணையால் சோமநாதர் கோவில் சர்தார் வல்லபாய்
பட்டேலால் புனருத்தாரணம் செய்யப்பட்டபோது " பியாரே சவுராஷ்டிரா தேஷ்
வாசியோ... என்று அவர் ஆற்றிய
உற்சாக எழுச்சி உரை தினத்தந்தி
மூலம் நமக்கு எட்டிவிட்டது... ஒன்றிரண்டு தமிழக
சௌராஷ்ட்ரர்களும் குஜராத் சோம்நாத் கோவில்
புணருத்தாரணத்திற்கு பின் நடந்த கும்பாபிஷேகத்திற்கு
அழைக்கப்பட்டனர். !!
ஹிந்தி
எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஒரு
புறம் இருக்கட்டும். நேற்றைய
பதிவின் தொடர்ச்சி ...... உங்களுக்கு
இப்போது ஒரு சந்தேகம் ஏற்படலாம்
... எப்படி 1948 இல் நடந்த சோமநாதபுர
கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழக சௌராஷ்டிரர்கள் அம்மாநில
அரசால் விருந்தினர்களாக அழைக்கப்படும் அளவிற்கு தொடர்பு இருந்து உள்ளது.
அப்படி இருக்கையில் 1960 இல் நடந்த குஜராத்தி
மொழி பிரச்சாரம், குஜராத் தனி மாநிலம்
போன்ற செய்திகள் நமக்கு எட்டவில்லை ? 1948 இல்
அந்த மாநிலம் சௌராஷ்டிரா மாநிலம்
என்றே அழைக்கப்பட்டு வந்தது. அன்றைய
நிலையில் மாநில முதல்வர்கள் "பிரதம
மந்திரி " என்றே அழைக்கப்பட்டு வந்தனர். சோமநாதர்
கோவில் கும்பாபிஷேகம் சௌராஷ்டிரா மாநிலத்தில் என்றெல்லாம் செய்திகள் வரும்போது அந்த
செய்திகள் நமக்கு தொடர்பு உடையவை
என்று நாம் (தமிழக சௌராஷ்ட்ரர்கள்
) நினைத்தோம். ஆனால் "சவுராஷ்டிரா" என்ற பெயர் மாற்றப்பட்டு
"குஜராத்" என்ற பெயர் முன்வைக்கப்பட்ட
பின், "குஜராத்" என்ற பெயரில் வந்த
செய்திகள் தமிழக சௌராஷ்ட்ரர்களுக்கு அந்நியமாய்
போய் விட்டது. இது நமக்கு மட்டும்
அல்ல, கத்ரி என்று கர்நாடகா
வாழ் " சௌராஷ்ட்ரா ஷத்ரியர்கள் " மக்களுக்கும் அந்நியமாய் போய் விட்டது. எனவே இந்த மொழி
ரீதியான செய்திகள் நம்மை பாதிக்கவில்லை.
நாம் இங்கு வழக்கம் போல
பரந்த பம்பாய் மாகாணத்தின் ஏதோ
ஒரு வட்டார வழக்கு மொழியை
பேசிக்கொண்டு இருக்கிறோம், கத்ரி
மக்களும் அப்படிதான், அவர்களும் பரந்த பம்பாய் மாகாணத்தின் ஒரு வட்டார வழக்கு
மொழியை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பிஹார்
வாழ் " ஜா " சமுதாய மக்களுக்கும் தமிழக
சௌராஷ்ட்ரர்களுக்கு ஏற்பட்ட நிலையே !! மொரிஷியஸ்,
ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடிமையாக
சென்ற பம்பாய் மாகாணத்தவர் தங்களை
குஜராத்தி என்று அடையாளப்படுத்திக்கொள்கையில், இந்தியாவின் ஒரு பகுதில் வாழும்
நம்மால் குஜராத்தி என்று அடையாளப்படுத்திக் கொள்ள
இயலவில்லை ! வரலாற்றில்
"பேசு மொழி " செய்யும் மாயங்களில் இதுவும் ஒன்று !! மொரிஷியஸ், ஆப்ரிக்காவிற்கு அடிமையாக வெள்ளைக்காரர் ஆட்சியில் சென்றவர்களுக்கும், கத்ரி, ஜா, மற்றும்
தமிழக சௌராஷ்ட்ரா மக்களுக்கும் இருந்த ஒரு வித்தியாசம்,
அடிமைகளாக சென்றவர்களுக்கு தன் தாய் நிலத்தில்
உறவினர்களோடு தொடர்பு இருந்தது.. கடித தொடர்பு மூலம்
பம்பாய் மாகாணத்தில் இருந்து சௌராஷ்டிரா மாகாணம்
இரண்டாக பிரிந்து மகாராஷ்டிரா, குஜராத் என்று பிரிந்தது
வரையிலான செய்திகள் அவர்களை எட்டியது., நமக்கோ நமது தாய்
நிலமான சௌராஷ்டிராவில் எந்த உறவினர்களும் இல்லை. எனவே
நாம் சௌராஷ்ட்ரர்களாகவே நீடித்து வருகிறோம். அன்று தமிழகத்தில்
நம்மில் பலருக்கு எழுத்தறிவு இல்லை . பின்னர்
படித்து முடித்து, விவரம் பெற்ற பின்னர்,
தமிழகத்தில் இருந்து பம்பாய் மாகாணம்
சென்று ஆராய்ச்சி செய்தால், பம்பாய் மாகாணத்தின் எந்த
வட்டாரவழக்கு மொழியை நாம்
தமிழகத்தில் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று அறிய இயலாத
அளவிற்கு மொழி ரீதியான மாற்றங்கள்
ஏற்பட்டு விட்டன.! ஒரே ஒரு விஷயம்
தான் உறுதியாக உள்ளது, நாம் குஜராத்
பகுதியை சேர்ந்தவர்கள், ஆயினும் பரந்த பம்பாய் மாகாணத்தின்
எந்த வட்டார வழக்கு மொழியை
நாம் பேசுகிறோம் என்று மத்திய அரசினாலேயே
கண்டறிய இயலாததினால், தமிழக சௌராஷ்ட்ரா மொழியை,
குஜராத்தி மொழியின் " கிளை மொழி " என்று
ஆவணங்களில் மத்திய அரசு குறிப்பிடுகிறது.
ஹிந்தி
எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஒரு
புறம் இருக்கட்டும். நேற்றைய
பதிவின் தொடர்ச்சி... பம்பாய் மாகாணத்தில் இருந்து
குஜராத் மாநிலம் குஜராத்தி மொழியின்
அடிப்படியில் பிரிந்து விட்டது. ஆயினும்
தனி மாநிலம் கோரிய " மஹாகுஜராத்"
குழுவினர்களுக்கிடையே சர்ச்சைகள் ஓய்ந்தபாடு இல்லை. சவுராஷ்டிரா
பகுதியை சேர்ந்த " கிர்னார் " மலைப்பகுதியில் பேசப்படும் வட்டாரவழக்கு மொழியை மாநில மொழியாக
ஏற்றுக்கொள்வது... அதற்க்கு மாநிலத்தின் பெயரிலேயே குஜராத்தி என்று பெயரிடுவது என்று
முடிவாகியது. ஆனாலும், சவுராஷ்டிரா, குஜராத் பகுதிகள் தங்களது
வட்டார வழக்கில் உள்ள பல வார்த்தைகளை
அப்படியே " புதிய குஜராத்தி " மொழியில்
சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விவாதங்களில் ஈடுபட்டன. இப்படித்தான்
பல பெர்ஷிய வார்த்தைகள் குஜராத்தியில்
சேர்க்கப்பட்டது. பெர்ஷிய
வார்த்தைகள் (ஈரான் ) குஜராத்தி மொழியில்
சேர்க்கப்பட காரணம் ? ஈரானில்
இஸ்லாம் மதம் வன்முறையால் வேகமாக
பரப்பப்பட்டபோது, இஸ்லாமை ஏற்க மறுத்தவர்களில்
யாஸிதி மக்கள், மற்றும் சிலர். இவர்களிடம்
தங்கள் முன்னோர்களின் தாயகம்
சவுராஷ்டிரா தேசம் என்ற தகவல்
இருந்தது. எனவே
இஸ்லாமை ஏற்க மறுத்தால் ஏற்படும்
பின் விளைவுகளுக்கு அஞ்சி சவுராஷ்டிராவில் அகதிகளாக
தஞ்சம் புகுந்தனர். இவர்கள்
தான் தற்போது இந்தியாவில் வாழும்
" பார்சி " என்று அழைக்கப்படும் பெர்ஷியா
(ஈரான் ) மக்கள். இவர்களும்
" புதிய குஜராத்தி " மொழி உருவாக்கத்தில் பங்கேற்ற
காரணத்தினால் பெர்ஷிய வார்த்தைகள் குஜராத்தியில்
இடம் பெற்றது. இப்படி
குஜராத் மாநிலத்திற்குள்ளேயே பல விவாதங்கள் மொழி
குறித்து நடந்து கொண்டே இருக்கையில்,
தமிழக சௌராஷ்ட்ரர்கள், கத்ரி சௌராஷ்ட்ரர்கள் போன்ற
குஜராத்தில் வாழாத , இந்தியாவின் பிறபகுதியில்
சென்று வாழும் மக்களையும் அழைத்து
" குஜராத்தி மொழி " உருவாக்கத்தில் பங்கேற்க வைத்தால் பிரச்சனைகள் மேலும் அதிகமாகும் என்ற
காரணத்தினால் " மஹாகுஜராத்" மொழி குழுவினர் நம்மை
தவிர்த்து விட்டனர். இன்று வரை இந்த
பிரச்னை குஜராத்தில் நீடிக்கிறது. இன்னமும்
முடிவான, முழுமையான " குஜராத்தி
மொழி அகராதி " என்ற இலக்கை அவர்கள்
எட்டவில்லை !! கடந்த 2009 ஆண்டு வாக்கில் அமெரிக்காவில்
உள்ள பல்கலை கழகத்தில் குஜராத்தி
மொழி அகராதி முழுமை பெறும்
வகையில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் முயற்சி
மேற்கொண்டு இருந்தார். அதில்
இன்னமும் சேர்க்க வேண்டியவைகள் இருந்தால்
விவரங்கள் தரலாம் என்று இணையதளத்தில்
கோரியிருந்தார். தமிழக
சௌராஷ்ட்ரா மொழி வார்த்தைகள் அதில்
சேர்த்தால் குஜராத்தி அகராதி முழுமை பெரும்
என்று முக்கியமான சில நூறு வார்த்தைகளை
அவருக்கு ஈமெயில் மூலம் அனுப்பி
வைத்தேன். பின் அவரின் முயற்சி
எந்த அளவில் உள்ளது என்ற
தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
2009 ஆம் ஆண்டு மத்திய அரசின்
உதவியோடு, தேவநாகரி எழுத்தில் மாற்றம் மேற்கொண்டு சௌராஷ்ட்ரா
மத்திய சபை சௌராஷ்ட்ரா மொழி
எழுத்தை பாளையங்கோட்டையில் விழாவெடுத்து வெளியிட்டது. அந்த
விவரங்களை விக்கிப்பீடியா வில் " சௌராஷ்ட்ரா மொழி " பக்கத்தை உருவாக்கி பதித்து வைத்து இருந்தேன். பொறுக்குமா
குழப்பவாதிகளுக்கு ? உடனே
நான் வெளியிட்ட விக்கிப்பீடியாவில் உள்ள சௌராஷ்ட்ரா மொழி
பக்கத்தை "திருத்தி"
ராமராய் எழுத்தை சௌராஷ்ட்ரா மொழி
எழுத்து என " காசு பணம் " செலவு
செய்து மாற்றினர். இதன்
உச்சகட்டமாக பாளையங்கோட்டையில் வெளியிடப்பட்ட சௌ. மொழி எழுத்தையே
அந்த விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து அழித்து விட்டனர். விடுவேனா
? மீண்டும் எனது முயற்சியால் பாளையங்கோட்டை
பிரகடன சௌ மொழி எழுத்தினை
விக்கிப்பீடியாவில் சேர்த்தேன். மீண்டும்
அதனை திருத்தி ஏதேதோ செய்து வைத்துள்ளனர்
ராமராய் குழுவினர். எப்படியோ
மக்களுக்கு உண்மையான தகவல் போய் சேர்வது
சிலருக்கு பிடிக்கவில்லை ! காரணம் என்ன என்று
நான் பலவிதங்களில் யோசிக்கிறேன் .. ஈகோ என்ற காரணம்
தவிர வேறு காரணங்கள் எனக்கு
புலப்படவில்லை. காலம்
தான் பதில் சொல்லும்.
No comments:
Post a Comment