Sunday, November 28, 2021

சௌராஷ்டிரா நெசவாளிகள் " மக்வாலா " என்று அழைக்க காரணமான சரித்திர சம்பவம்

 


*வரலாற்றில் ஒரு துளி : தமிழாக்கம் தெஸ்வான் பாஸ்கர் சேலம்* 

சௌராஷ்ட்ரா நெசவாளிகள் சமூகமான  "வன்கர் சமூகம் " பற்றிய  பாரம்பரிய கர்ணபரம்பரை செய்தி :  

கி பி 1114.வருடம்  சோலங்கி வம்சம் குஜராத் மாநிலத்தின் தலைமையில் இருந்தது. சோலங்கி வம்சத்தின் ஆறாவது வாரிசாக, சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கி குஜராத், சவுராஷ்டிரா  முழுவதையும்  படன்  என்ற ஊரில் இருந்து  இருந்து ஆட்சி செய்து வந்தார்.  மன்னர் சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கி கட்டுமானம் செய்வதை  மிகவும் விரும்பினார். தாத்தா காலத்தில் இருந்து முடிக்கப்படாமல் இருந்த "ருத்ரமஹாலயா" கோவிலை கட்டி முடித்ததன் மூலம் மகத்தான புகழ் பெற்றார். அவர் சௌராஷ்டிராவில் பல கோவில்கள், நீர் கிணறுகள் மற்றும் கோட்டைகளை கட்டினார், அதன் எச்சங்களை ஆனந்த்பூர், சோபாரி, வாத்வான் போன்ற இடங்களில் இன்றும் காணலாம்.


சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கி காலத்தில் படன் என்ற ஊர் நாட்டின் தலைநகராக இருந்தது. இதனால்  அவர் படன் நரேஷ் என்று அழைக்கப்பட்டார். அவர் தங்கள் முன்னோர்கள் காலத்தினை அனுசரித்து  தமது தாத்தாவின்  விருப்பத்திற்கேற்ற  அழகிய கட்டுமானங்களை மேற்கொண்டார். கட்டுமான பணிக்காக ராஜா சித்தராஜா ஜாய்சின்ஹ்;  மால்தேவ், ஓடோ, பனஸ்கந்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்தார். மேலும்  துர்லப ராஜாவால் கட்டப்பட்ட ஏரியை மீண்டும் தூர் வாரினார்.   இதற்கிடையே  ராஜா இந்த கட்டுமான  தொழிலாளர்களில் அழகான பெண்களில் ஒருவரான ஜஸ்மா(ய்)  ஓடனைக் காதலித்தார்.


ஜாஸ்மா(ய்)வை தனது ராணியாக்க பல முறை வேண்டுகோள் விடுத்தார், ஆனால் ஜஸ்மா(ய்)யோ  ராஜா சித்தராஜ் ஜெய்சிங் சோலங்கியின் ராணியாக இருக்க ஜஸ்மா(ய்) சம்மதிக்காமல், ஏற்கனவே தாம் கல்யாணமானவர் என்பதனை தெரிவித்து,  தனது  கணவருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 


ஆனால் அம்மன்னரிடம் நேர்பெயர் வாங்க எண்ணம் கொண்ட சில குறுக்குவழி வீரர்கள்,  ஜஸ்மாவின் கணவரைக் கொன்று, ஜஸ்மா(ய்)வைக் கைப்பற்றி அரசர் முன் ஒப்படைத்தனர். அந்த க்ஷணத்திலேயே அரசன் முன் இருந்த விதவை ஜஸ்மா ஓடனே, தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த குத்துவாளைத் தன் வயிற்றில் இறக்கி தற்கொலை செய்து சதி மாதா ஆனார் ஜஸ்மா.

ஜஸ்மா   இறக்கும் வேளையில், ராஜா சித்தராஜ் ஜெய்சிங் சோலங்கி உருவாக்கிய, அரிய வகையான படன் ஏரியில் என்றைக்கும் மக்களுக்கும் நீர் வராது என்று சபித்தாள். தலைநகர் படன் தண்ணீர் இல்லாமல் போகும்.!


தனது வீரர்கள் செய்த காரியத்தை எண்ணி, சிவ பக்தரான சித்தராஜ் ஜெய்சிங் சோலங்கி சதி ஜஸ்மா ஓடனாவின் சாபத்தால் மிகவும் வேதனையடைந்தார். பின்னர் சௌராஷ்டிரா மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளில் தனது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய சிவன் கோவில்களை கட்டினார்.  தான் அமைத்த ஏரியைத் மேலும் தோண்டி, 1000 சிவலிங்கங்கள் மற்றும் 500 மைல் சுற்றளவு கொண்ட "சஹஸ்ரலிங்க " ஏரியாக கட்டினார், மேலும் இடையில் ஒரு பெரிய ருத்ரேஷ்வர் மகாதேவ் கோயிலையும் கட்டினார்.


பல ஆண்டுகளாக, மன்னர் சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கி தினமும் காலையிலும் மாலையிலும் இந்தக் கோயிலிலும் ஏரியிலும் இருப்பார். தண்ணீருக்காக பிரார்த்தனை செய்வார், யாகம் செய்வார், ஆனால் சதி ஜஸ்மா ஓடனாவின் சாபத்தால் சஹஸ்ர்லிங்க  ஏரியில் தண்ணீர் இல்லை.

இதனால் தண்ணீர் பிரச்னை தீவிரமடைந்து தலைநகர் படனில் மக்கள் தண்ணீரின்றி தவித்தனர்.

இந்த சாபத்திலிருந்து விடுபட, மன்னர் சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கி, தனது மாநில மந்திரி "முஞ்ஜால்" மூலம் மதத் தலைவர்கள், ஜோதிடர்கள், பிராமணர்களின் கூட்டத்தை அழைத்தார், அங்கு வேதம் ஓதப்பட்டது. பல விவாதங்கள் நடந்து, வேதம் படித்து கடைசியில் தீர்வு சொல்லப்பட்டது, 

தற்கொலை செய்த சதிமாதா ஜஸ்மா ஓடநாவின்  சாபம் நீங்கவும், படன் மக்கள் தண்ணீருக்காக அலைவதைத் தடுக்கவும், "மனைவியுடன்  வாழும் ஆணின் பலி தியாகத்தை", தற்கொலை செய்து இறந்த ஜஸ்மா(ய்)  விரும்புகிறார் என்று அருள்-வந்தவர்கள் கூறினார்கள் ! . இதற்கு சாட்சியாக முப்பத்திரண்டு சகுன அறிகுறிகள் உடனே ஏற்பட்டன ! இதை அறிந்த  மன்னரின்  உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ராஜா சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கி கூட்டத்தில் இருந்த மக்கள் முன்னிலையில் உயிர் தியாகம் செய்ய அழைப்பு விடுத்தார், ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு, 3-4 நாட்களுக்கு உயிர் தியாகம் செய்ய அழைப்பு விடுக்கும் அறிவிப்பு மாநிலம் முழுவதும் வெளியிடப்பட்டது. 


ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் உயிரை நேசித்ததால் யாரும் தியாகம் செய்ய முன்வரவில்லை.


அந்த நேரத்தில் கோல்காவுக்கு அருகில் வசிக்கும் "வன்கர்/ நெசவாளர்" சாதியின் மாவீரன் மகன் "மேக் மாயோ", தாகத்தால் வாடும் படன் மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக இருந்தான். சிறுவயதில் தந்தை தரம்ஷியின் மறைவுக்குப் பிறகு, தாத்தாவின் நிழலில் வளர்ந்த "மேக்மாயோ" அம்மா கங்காபாயின் (கெதிபாய்) ஆசியுடன், அவர் தனது மனைவி ஹர்காவிடம் (மார்கபாய்) விடைபெற்று பலிபீடத்தில் ஏற  தயாரானார். 


யக்ஞத்தின். பூமியான தோல்கா பகுதி மக்கள் அனைவரின் வேண்டுகோளின் பேரில், மேக்மாயோவை படனில் உள்ள மன்னர் சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கியின் அரசவைக்கு அழைத்து வந்தார்.


அரசவையில் அமர்ந்திருந்த இளவரசர்களும், பிராமணர்களும், பிற நகர மக்களும் "மேக மாயோ"வை கண்டு எழுந்து நின்று, "இந்த மேகமாயா  நெசவாளர் சாதியில் தீண்டத்தகாதவன் , இவனுடைய தியாகத்தை பூமித் தாய் ஏற்காது! என்றனர்... 


 இதைக் கேட்ட மன்னன், கூட்டத்தில் இருந்த ஜோதிடர்களை பார்த்தான், ஜோதிடர்கள் மேகமாயாவை பார்த்து ஒருமனதாக கூட்டத்தில், “அரசே! பிறருக்காக உயிர் தியாகம் செய்ய தயாராக உள்ள  மேகமாயோ தீண்டத்தகாதவன்  அல்ல! அதுவும் பிராமணர்களின் குரு! முப்பத்திரண்டு அம்சங்கள் உடலில் ! அத்தகைய துணிச்சலான மனிதனின் தியாகம் சதி ஜஸ்மா(ய்)யால் ஏற்றுக்கொள்ளப்படும்! ”

சித்தர்ராஜ் ஜெய்சிங் சோலங்கி மேகமாயாவை தியாகம் செய்யுமாறு கேட்டபோது, மேகமாயோ பயமின்றி, அச்சமின்றி ஆனால் பணிவுடன் பதிலளித்தார், "ஓ அன்னதாதா, மகாராஜா, என் தியாகத்தால் மக்களுக்கு தண்ணீர் கிடைத்தால், சந்தோசம், அதற்க்கு என்   தலை பலிக்காக உள்ளது, ஆனால் உங்கள் இடம் ஒரு கோரிக்கை உள்ளது....


என்ன கோரிக்கை ? என்று " மன்னன் "பந்து வீர் மாயா பந்து, என்றழைத்து தயக்கமின்றி பந்து (உறவினரே)  என்றான். அப்போது மேகமாயோ தலை குனிந்து “மகராஜ்! நமது நெசவாளர் சாதி ஆழமான வீழ்ச்சியில் உள்ளது.

ஏழமை . பின்தங்கிய நிலையில் உள்ளது. தீண்டாமை இழிவை நீக்குங்கள். எங்கள் சமுதாயத்தை சாதியத் தடைகளில் இருந்து விடுவித்து, முற்றத்தில் துளசி, பிப்லா மர நிழல், நேர்த்தியான ஆடைகள் அணிய அனுமதி, நலம் பெற்ற வம்சாவளிக்கு  பரோட் உட்பட ஊரின் நடுவில் வாழ சம உரிமை ஆகியவற்றை வழங்குங்கள்” என்று கேட்டார்.  அனைத்து வழங்கப்படும் என மன்னர் சித்தராஜும் கூறினார். 


 இந்திய வரலாற்றில் தலித் சமுதாயத்திற்கு சம உரிமை வழங்கிய முதல் பெரிய மனிதர் வீர் மேகமாயா தான் ஆனால் வரலாற்றாசிரியர்களின் புத்தகங்களில் அது பற்றிய பதிவு இல்லை !!


விக்ரம் சம்வத் 116, மஹாசூத் சதம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேளதாளங்கள் முழங்க நகரவாசிகளின் ஊர்வலத்தில்  ரம்ஜாத் அபில்-குலால் மற்றும் வீர் மேகமாயா வின்  மலர் ஊர்வலம், இதில் ராஜா சித்தராஜ் ஜெய்சிங் சோலங்கி,  நாகர் சேத், தர்மகுருக்கள், ஜோதிடர்கள், பிராமணர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுடன் , அனைவரும்  சதிமாதா  ஜஸ்மா ஓடனாவின் ஜெய் ஜெய் கோஷத்துடன் , தாகத்தால் வாடும் படன், சாபம் தீர்க்க பலி கொடுத்தார். மேக மாயோ வின்  சமாதி லிதி மனிதர்களின் உயிரைக் காக்க. இன்றும் படனில் உள்ளது.  படனில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏரி, வீர் மேகமாயாவின் தியாகத்திற்கு சாட்சியாக உள்ளது.  


இம் மேக்மாயோவின் பெயரால் நெசவாளர் சமூகம்  அழைக்கப்படுவதாயிற்று.! இதனால் வன்கர் சமூகம் மாக்மாயோ -> மஹ்யமாயோ -> மக்வாலா ->  மக்வால் சமூகம் என்று பெயர் மாற்றம் பெற்று மஹாராஷ்டிராவில் உள்ளது. !   


இவ்வாறு மக்வால்-நெசவாளர் சமூகம் புனித ஷிரோமணி "மேக்மாயா"வை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வணங்குகிறது, ஏனெனில் வீர் மேகமாயா வாழ்க்கையின் விரிப்பில் நித்திய வாழ்க்கையை அடைந்தார். சித்பூர் படனின் குஜராத் நெசவாளர் சங்கம் வீர் மேகமாயாவின் தியாகத்தின் புகழ்பெற்ற கதையை நிரந்தர நினைவாக பாதுகாக்க முயற்சிக்கிறது.   "வீர் மாயா ஸ்மாரக் சமிதி"யின் முயற்சியால் வீர மாயாவின் தியாகம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு அற்புதமான நினைவு வளாகம் அமைக்கப்படுகிறது. குஜராத் மாநில அரசும் இதன் கட்டுமானத்திற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முன்மொழியப்பட்ட வளாகத்தில் வீர் மாயா ஸ்மிருதி மந்திர், வன்கர் சமூக வரலாற்று ஆராய்ச்சி மையம், நூலகம், அதிதிபவன், பால கிரீடங்கனா, குருகுலம்  மற்றும் ஸ்ரீ வீர் மாயாவின் யசோகதா கதை  "ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி" ஆகியவையும் நடத்தப்படுகிறது.