Sunday, December 30, 2018

கல்வெட்டு எழுத்துக்களில் இருந்து சௌராஷ்ட்ரா மொழி எழுத்து நிர்ணயம்

கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களில் இருந்து சௌராஷ்ட்ரா மொழி எழுத்து நிர்ணயம்.
தமிழக சௌராஷ்ட்ரர்கள் கி பி 1400 க்கு பிறகு குஜராத் சவுராஷ்ட்ராவில் இருந்து தமிழகம் புலம் பெயர்ந்தவர்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ள பரவலான உண்மை.  இந்த கால கட்டத்தில் குஜராத் சவுராஷ்டிரா பகுதியில் என்ன எழுத்து-முறை உபயோகத்தில் இருந்தது என்பதை அக் காலகட்ட கல்வெட்டுகளில் இருந்து அறியலாம்.  இதன் மூலம் சௌராஷ்ட்ரா மொழியின் மூல எழுத்து எது என்று அனுமானிக்கலாம்.  
திரு. ரிச்சர்ட் சாலமோன், (Richard Salomon) ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் நியூயார்க் இல் (Newyork Oxford) இருந்து 1998  ஆம் ஆண்டு  (" Indian Epigraphy " ) இந்திய கல்வெட்டியல் பற்றிய புத்தகம் வெளியிட்டு உள்ளார்.   கி பி 3 நூற்றாண்டில் சவுராஷ்டிரா பகுதியில் எழுதுவதற்கு பயன்பாட்டில் இருந்தது " ப்ராம்மி " எழுத்து முறை.  சௌராஷ்ட்ரர் புலம் பெயர் காலமான கி பி 1400 இல்,  கி பி 3 நூற்றாண்டில் இருந்துவந்த ப்ராம்மி எழுத்து;  காலப்போக்கில் உருமாற்றம் பெற்று, தேவநாகரி எழுத்து மற்றும் தென் இந்திய எழுத்துக்களாக பரிணாமம் அடைந்தன என்பதை விளக்கி உள்ளார்.  
உதாரணமாக " " என்ற எழுத்து; 3ஆம் நூற்றாண்டில் இருந்த " ப்ராம்மி வடிவ" எழுத்தில் இருந்து 12  ஆம் நூற்றாண்டு வரை, காலகட்ட வாரியாக எழுத்துக்கள் பரிணமித்த வரைபடத்தை ரிச்சர்ட் கொடுத்துள்ளார்.  கால கட்ட வாரியாக எழுத்தின் வளர்ச்சி விளக்கப்படுகிறது.


குஜராத்தில் சௌராஷ்ட்ரா பகுதி உள்பட கிடைத்த கல்வெட்டுகளை பற்றி ரிச்சர்ட் சாலமோன், (1998) பின்வருமாறு தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 

".............. 3.3.3 Sanskrit inscriptions from western India in the Ksatrapa period The inscriptions of the earlier house of Western Ksatrapa kings, namely, the Ksaharata line of Nahapana (middle of the first century A.D.?), are mostly in Prakrit or in hybridized Prakrit, with the important exception of Nasik inscription no. 10 of Nahapana's The Languages of Indie Inscriptions 89 son-in-law Usavadata (SI 1.167-70). The opening portion of this inscription (11. 1- 3), eulogizing Usavadata, is written in a fair approximation of standard Sanskrit with some hybrid features such as frequent sandhi hiatus (e.g., dharmatmana idam, 1. 3) and hybrid morphology such as bhojdpayitra (1. 1). The remainder of the inscription, recording the actual donations, is in a somewhat more hybridized style. Senart (El 8, 79) pointed out that about the first half of the eulogistic portion is virtually a Sanskrit rendition (or, as Senart puts it, a "reproduction in Sanskrit orthography") of the description of Usavadata in the Prakrit Karle cave inscription of the time of Nahapana (SI 1.171-2). The linguistic innovation in this inscription presumably reflects contemporary developments in Mathura and adjoining regions, though it is not clear why Sanskrit was used for this inscription only; apparently, this is an instance of the orthographic options alluded to previously (3.2.3.2). The Junagadh rock inscription of Rudradaman (SI 1.175-80), the greatest king of the second Western Ksatrapa line of Castana, was written shortly after A.D. 150 and represents a turning point in the history of epigraphic Sanskrit. This is the first long inscription recorded entirely in more or less standard Sanskrit, as well as the first extensive record in the poetic style. Although further specimens of such poetic prasastis in Sanskrit are not found until the Gupta era, from a stylistic point of view Rudradaman's inscription is clearly their prototype. But as noted by Kielhorn48 and others,49 the language of the Junagadh inscription is not pure classical Sanskrit in the strictest sense of the term. The orthography is inconsistent in the use of anusvara and visarga and in the notation of double consonants, and the nonclassical retroflex / occurs several times (e.g.,pdll, 1.1). Local dialect features are probably reflected in the lengthened vowels in riirvyajam avajityavajltya (1. 12). VTsad- instead of standard vimsati- (1. 7) also reflects local dialect pronunciation of the epic variant vimsat- (cf. slha for simha in the Gunda ins., discussed in the next paragraph). Patina instead of patya (1. 11) in the sense of 'lord' is likewise a common epicism, though technically incorrect. Other questionable uses from the classical point of view include anyatra samgramesu instead of... samgramebhyah (1. 10; cf. Kielhorn, El 8, 40 n. 2) and the redundant a garbhat prabhrti (1. 9). The language of the Junagadh inscription is thus a close approach to high classical Sanskrit, but, like early literary Sanskrit generally, it shows the influence of the less formal epic-vernacular style in which some of the grammatical niceties of Paninian/classical Sanskrit were not observed. But the nonstandard features in question are in general not of the same order as those which characterize the hybrid and hybrid-influenced inscriptions of Mathura. Thus although we can suspect that the inspiration for using Sanskrit for epigraphic purposes emanated from Mathura (there are clear historical connections between the Western Ksatrapas and the Scythian dynasties of Mathura), the source of the Sanskrit of the Junagadh inscription was evidently the preclassical literary style current among the literati of the day rather than the Sanskritized hybrid of Mathura and adjoining regions. This literary style of Sanskrit was not, however, employed in the inscriptions of the time of the Western Ksatrapa rulers who succeeded Rudradaman. These inscrip48. El 8, 39-40. 49. E.g., Renou, Histoire de la langue sanskrite, 96, refers to "des epismes linguistiques." 90 Indian Epigraphy tions, which are unofficial records, reflect a less formal style which retains some characteristics of the hybrid language. A typical example is the Gunda inscription (SI 1.181-2) of the time of Rudrasimha I (Saka 103 = A.D. 181), which contains such nonstandard forms as (tri)yuttarasate for tryuttara- and rudrasihasya for rudrasimhasya (cf. visad- forvimsat- in the Junagadh inscription), as well as the hybrid sandhi rajno ksatrapasya. Inscriptions of contemporary dynasties in western India show similar linguistic characteristics. A Satavahana inscription of the time of VasisthTputra SrI-Satakarni (second century A.D.) from Kanherl (Biihler, IA 12,1883, 272) is in hybridized Sanskrit (e.g., srT-sata[karn]I[s]ya, 1. 1). From a slightly later period, the Kanakhera inscription (SI 1.186-7) of A.D. 279 is in mostly standard Sanskrit but still shows some features reminiscent of hybrid, such as the causative participle khdnapito (1. 6). Also from the third century A.D., we have several Sanskrit inscriptions on yupas from Badva (SI 1.91-2) and Barnala (El 26, 118-23) in Rajasthan. Their language still shows significant hybrid characteristics, most strikingly in the dating formula krtehi or kritehi for Sanskrit krtaih, i.e., "in [lit. 'by'] Krta [- Vikrama] years." This follows the familiar pattern of inscriptions from the early centuries of the Christian era (e.g., the Mora well inscription discussed earlier), with the portions concerning the date and other mundane information in more Prakritic language. This suggests that everyday documents were still being written in MIA or mixed dialects at this time, so that people would habitually employ set phrases like krtehi in recording dates, even at the head of documents which were to be composed in Sanskrit.50..........." 
மேலும் பல்வேறு கல்வெட்டுகளில் தேவநாகரி எழுத்துக்கள் மற்றும் அதன் வட்டார வேறுபாட்டு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதை பின்வருமாறு ரிச்சர்ட் சாலமோன், (1998) குறிப்பிடுகிறார் .
" ...... 3.4.3 Gujarati D. B. Diskalkar, Inscriptions of Kathiawad. Inscriptions in Gujarati from various parts of the modern state of Gujarat, especially the Kathiawar and Kacch regions, number well in the hundreds; for examples see Diskalkar, nos. 79,82-3,85,87-8,90, and so on, and ARIE 1969-70, nos. B.22-138. Gujarati linguistic features appear in some Sanskrit inscriptions of the fourteenth century (e.g., Diskalkar nos. 36-7, etc.; New Indian Antiquary 1, 587-8), and inscriptions written entirely or nearly entirely in Gujarati date from the second half of the fifteenth century on. The latest Gujarati inscription cited by Diskalkar (no. 193) is dated Vikrama Samvat 1935 = A.D. 1879. 70. Several Oriya inscriptions are also transcribed (in Devanagai) in SH 5 (nos. 1006, 1119, 1121, 1132-3, 1152, 1161) and 6 (nos. 654, 697, 700-3, 748-9, 778, 895, 903, 908-9, 927, 1089, 1145-65). 71. See 3.3.8.3 and SIE 58. 102 Indian Epigraphy The majority of Gujarat! inscriptions are private dedicatory or memorial records. The former typically record land grants, the foundation or repair of temples or mosques, or the digging of wells. Memorial inscriptions are very frequently seen on memorial pillars orpaliyas, typically recording deaths in battle ("hero-stones") or by sahagamana ("raff-stones"). Pilgrims' records are also common (e.g., ARIE1969-70, no. B.24, etc.). Many of the Gujarati inscriptions are informally or incompetently written. Gujarati inscriptions are generally written in Devanagari script or its local variant, called Boriya, but some are inscribed in script forms similar to modern Gujarati (NIA 1, 588). Bilingual (and sometimes trilingual) inscriptions, usually with Sanskrit or Persian, are found in some numbers, but the majority of Gujarati inscriptions are monolingual ....." 

தமிழக சௌராஷ்ட்ரர்கள் எந்த எழுத்து பயன்படுத்தி வந்தனர் என்று ஆதார பூர்வமான செப்பேடு கல்வெட்டு போன்றவைகள் கிடைக்காத நிலையில் புலம் பெயர் காலத்தை வைத்து சௌராஷ்ட்ரர்கள் அக்காலகட்டத்திய குஜராத்  சௌராஷ்ட்ரா பகுதியில் பயன்படுத்திய எழுத்துக்களை வைத்து தமிழகத்தில் அந்த எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று அனுமானிக்கலாம். 
பாலியா (Palia) என்று அழைக்கப்படும் நடுகற்கள் பல குஜராத் சவுராஷ்டிரா பகுதி கிராமங்களில் கிடைத்து உள்ளன. இந்த நடுகற்களில் தேவநாகரி எழுத்துக்களே காண படுகின்றன. கீழ உள்ள பாலியா நடுகற்களின் புகைப்படங்களில் இருந்து இதை அறியலாம்.






Wednesday, December 26, 2018

Voyages : South Madurai to Saurashtra


The ‘Kuvalayamaalaa’ written by Udyotana Suri, dated 779 Ce gives several interesting real life stories. In one story, it is said that a Brahmin by name Chandrasoma accompanied a party of acrobats and bards to a village because of utter poverty.


The people has assembled to see the show. Chandrasoma’s wife also came to see it. He suspected his wife’s fidelity and killed her in a rage. After realising that he had done a heinous crime, he started lamenting over his deed and decided to immolate himself in the funeral pyre. But people pulled him out and took him out to the assembly of learned scholars. The majority of the Pandits advised him to quit his home and go on a pilgrimage to various holy places. They asked him to donate all his belongings to Brahmins. After offering oblations to manes he will be freed from punishment.

Jain literature also give lot of information about business travel.


16 types of Winds

Jain monks and Jain merchants did lot of sea voyages. Jain literature gives very realistic accounts of sea voyages. The " Avasyaka churni " informs us there were regular sailings from Madurai to Saurashtra (During Sangam Tamil times, South Madurai was on the sea shore; later it was destroyed in a Tsunami). It is mentioned in a story that the ruler of Madurai, Pandusena had two daughters. When they were sailing to Saurashtra, they met a shipwreck during a storm and they offered prayers to Skanda and Rudra.

The successful termination of a sea voyage depended on favorable wind. The sea wind is divided into sixteen categories, namely:

1.Praaciina vaata (Easterly wind)
2. Udiiciina vAaata (Northerly wind)
3. Daakshinaatya vaata (Southerly wind)
4. Uttarapaurastya (Northerly wind moving against forward movement)
5. Sattvasuka ( wind blowing in all directions)
6. Dakshina-Puurva tungaara ( astrmy wind in S E direction)
7. Apara- Dakshina Bijaapa ( the wind blowing from S.W.)
8. Apara Biijaapa ( West wind)
9. Aparottara garjabha (N W Storm)
10. Uttara sattvaasuka
11. Dakshina sattvaasuka
12. Puurvatungaara
13. Dakshina Bijaapa
14.Paschima Biijaapa
15. Paschima garjaabha
16. Uttariyaa Garjaabha
All these technical terms show that the merchants had their own jargon of sea travel. A sailor would understand such terms better than  laymen.

Source : Written by London Swaminathan 


Date: 31 May 2018

Time uploaded in London – 16-55

Post No. 5063

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU https://swamiindology.blogspot.com/2018/05/ancient-hindu-travel-stories-post-no5063.html




மேற்காணும் மூவேந்தர்களின் ஆட்சி எல்லை வரைபடத்தை பார்த்தால், கர்நாடக மன்னர் " இரண்டாம் ந்ருப காம " என்பவர் காலத்தில் சௌராஷ்ட்ரா மக்கள் சேலம் வந்தனர் என்பதை உறுதி படுத்தலாம்
பின்னர் சிவாஜி காலத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் வருகையும், விஜயநகர ஆட்சியில் மதுரை வருகையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சேர நாடு என்ற பெயர் கேரா  நாடு என்று மருவி பின்னர், கேரளா என்று ஆகியது என்பது பல அறிஞர்கள் கூற்றுஏன் கேரா என்ற பெயர் வந்தது ? கேரளத்தில் பழாப்பழ  விளைச்சல் அதிகம்அது தினமும், கப்பல் மூலம் சௌராஷ்ட்ரா தேசம் வந்தது என்று ஜைன இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்
சௌராஷ்ட்ரா மொழியில் பலாப்பழத்திற்கு " கேரா பல்லோ " என்று  கூறுகிறோம்இந்த கேரா தான் கேரா நாடு என்று மருவி   இருக்கவேண்டும்சில தமிழ் அறிஞர்கள்   வேறு வகையில் சொல்கிறார்கள்வடமொழியில் கேரா என்றால் தேங்காய் எனவே " தேங்காய் நாடு " என்று அழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆயின் இதில் பொருத்தம் இல்லைஏன் எனில் வடமொழியில் நாரிகேலா  என்றால் தான் தேங்காய்வெறும் கேரா அல்லஎனவே, சௌராஷ்ட்ரா மொழியில் பலாப்பழத்தின் பெயரான கேரா / கெரா  என்ற பெயறில் அழைக்கப்பட்டுகேரளம் என்று பெயர் பெற்று இருக்கும்.

Thursday, August 23, 2018

சௌராஷ்ட்ராவின் ஓலைச் சுவடிகள்

இது இருபத்தோராம் நூற்றாண்டு.  கி பி 2018  ம் வருடம்.  தமிழக சௌராஷ்ட்ரா மக்கள் சுமார் அறுநூறு முதல் எண்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்தனர் என்று கணிக்கப்படுகிறது.  அப்படியானால் கி பி 12 ம் நூற்றாண்டு முதல் சௌராஷ்ட்ரர்களின் புலம் பெயர்வு நிகழ்வு நடைபெற்றது என்று கூறலாம்.   இன்றைய சௌராஷ்ட்ரா நிலப்பகுதி குஜராத் மாநிலத்தின் ஒரு அங்கமாக உள்ளது.  குஜராத்தில் ( சௌராஷ்ட்ரா பகுதி உள்பட ) 12 ம் நூற்றாண்டில் மக்கள் பேசிய மொழி " பழைய குஜராத்தி " என்றும் பழைய குஜராத்தி மொழியின் எழுத்து வடிவம் தேவநாகரி என்றும் அறியப்படுகிறது.  தேவநாகரி எழுத்தில் பழைய குஜராத்தி 12 நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டு உள்ளதற்கான ஓலை சுவடி ஆதாரங்கள் உள்ளன.
ஸ்ரீ பாலா மன்னரின் தேவி பூஜை - ஓலை சுவடி

மகாவீரரின் பிறப்பு - ஓலைச்சுவடி


உபதேச மாலை  - ஓலைச்சுவடி
இச்சுவடிகள் கி பி 12  நூற்றாண்டு முதல் 16 நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தவை.  பழைய குஜராத்தி மொழியில் எழுதப்பட்டவை.  இவைகளில் தேவநாகரி எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டு உள்ளன.  தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த சௌராஷ்ட்ரர்களில் படிப்பறிவு பெற்றவர் இருந்து இருந்தால் இத் தேவநாகரி எழுத்துக்களையே தமது எழுத்துருவாக கொண்டு வந்து இருப்பர்.  ஆயினும் தமிழக புலம் பெயர் சௌராஷ்ட்ரர்கள் தேவநாகரி எழுத்தில் எழுதிய ஓலை சுவடிகள் கிடைத்ததாக தெரியவில்லை .

எப்படியாயினும், பிற்காலத்தில் தமிழகம் ஆந்திர மாநிலத்தோடு ஒன்றிணைந்து இருந்த போது தெலுகு மொழி பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழியாக இருந்தது.  தமிழக சௌராஷ்ட்ரர்களும் தெலுகு மொழி பள்ளிகளில் பயின்றனர்.  (  இன்றும் கி பி 1800 -1900 நூற்றாண்டு முன்பகுதி வரை தெலுகு மொழியில், தெலுகு எழுத்தில் எழுதப்பட்ட பல பழைய சொத்து பத்திரங்கள் தமிழகத்தில் காணலாம்.) பின்னர் தமிழகம் தனி மாநிலமாக உருவெடுத்தத்தில் இருந்து தமிழ் எழுத்துக்களை பயின்று பயன்படுத்தி வருகின்றனர்.

Sunday, August 19, 2018

சௌராஷ்ட்ரா ஆட்சியாளர்களின் நாணயங்கள்

சௌராஷ்ட்ரா ஆட்சியாளர்களின் நாணயங்கள் :  சௌராஷ்ட்ரா ஜனபதா என்று அழைக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசமாக இருந்த காலகட்டத்தில் தங்க வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன .அந்த நாணயங்கள் " கர்ஷபணா" என்ற பெயரில் மக்களால் அழைக்கப்பட்டது
ஜனபதா காலத்திய நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளில் முத்திரை இடப்பட்டது போன்று காட்சியளித்தது.  காலப்போக்கில் நாணயங்கள் சிறப்பான முறையில் வடிவம் பெற்றன. இந்த நாணயங்களில் ஸ்வஸ்திக் , ஸ்ரீ , யானை போன்ற சின்னங்கள் இடம் பெற்றன.
ஜனபதா நாணயங்களில் கோவில் கீழ்தள அமைப்புகளின் வடிவங்களும் இடம் பெற்று இருந்தன.
சௌராஷ்ட்ரா சமஸ்தானங்களில் ஒன்றான பரோடா பல நாணயங்களை வெளியிட்டுள்ளது .
பரோடா சமஸ்தான அரசரான கணபதி ராவ் வெளியிட்ட நாணயம் 
இந்த நாணயன்யங்கள் குஜராத் சௌராஷ்ட்ரா பகுதி  அம்ரேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை.

பரோடா சமஸ்தான அரசர் காண்டே ராவ் வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் மல்ஹர் ராவ் வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி  ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி  ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள்
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி  ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள்
நவநகர் சமஸ்தான அரசர் விபாஜி வெளியிட்ட நாணயம்
இந்நாணயங்களில் தேவநாகரி எழுத்துக்களே காணப்படுகின்றன. சௌராஷ்ட்ரத்தை ஆக்கிரமித்த  முஸ்லீம் ஆட்சியாளர்களின் நாணயங்களில் மட்டும் அரபி எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஆகவே வரலாற்று காலம் முதல் ஆங்கிலேயரிடம் சுதந்திரம் பெறும் வரை நாணயங்களில் தேவநாகரி எழுத்துக்களே காணப்படுகின்றன.  இந்த ஆதாரங்களில் இருந்து சௌராஷ்டிர மொழிக்கும் தேவநாகரி எழுத்தே பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.

Friday, August 17, 2018

சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்





மேலே காண்பவை  சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்.  வீரர்கள் மற்றும் சதி என்ற உடன்கட்டை ஏறிய பெண்கள் மற்றும் போர் சாகசம் நிகழ்த்தியவர்கள், மற்றும் சில சிறப்பு நிகழ்வுகளில் நிறுவப்பட்ட நினைவு தூண் சிலைகள் "நடுகற்கள்" எனப்படுகின்றன. இந்த நடுகற்களின்  வேறு பெயர்கள் "பாலியா" அல்லது "கம்பி" (Khambi ) எனப்படுகின்றன.  குஜராத்தில்; குறிப்பாக  சௌராஷ்ட்ரா பகுதியில் இந்த நடுகற்கள் அதிகம் காணப்படுகின்றன.

சௌராஷ்ட்ரா பகுதி தவிர, கட்ச், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நகர்பார்கர் போன்ற இடங்களிலும் இது போன்ற நடுகற்கள் காணப்படுகின்றன.

பாலியா - எனில் "பால" என்ற சொல்லில் இருந்து பிறந்த ஒரு வார்த்தை.  "கம்பி" (Khambi) என்றால் "தூண்" என்று பொருள்படும் வார்த்தை.  இவ் இரண்டு பெயர்களில் நடுகற்கள் சௌராஷ்ட்ராவில் அழைக்கப்படுகின்றன.
லோதால், தார், ஜூனாகாத், தாரங்கதாரா, போன்ற பகுதிகளில் அதிகமாகவும் சூரத் , அஹமதாபாத் (கர்ணாவதி) ஆகிய இடங்களில் சிலவும் காணப்படுகின்றன.
இந்நடுகற்களில், தேவநாகரி எழுத்துக்களில்; "நடுகற்கள்" யாருக்காக நிறுவப்பட்டது, எந்த வீர தீர செயலுக்காக நிறுவப்பட்டது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.  இந்த நடுகற்கள் காலம் கி பி பதிநோறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினேழாம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது.  சௌராஷ்ட்ரர்கள் கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று அனுமானிக்கப்படுகிறது.   எனவே கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த சௌராஷ்ட்ரர்கள் தேவநாகரி எழுத்தை பயன்படுத்தி வந்திருப்பார் என்பது கண்கூடு.  சிலர் வேறு எழுத்தை சௌராஷ்ட்ரா மொழியை எழுத பயன்டுத்தினாலும் அவைகள் எல்லாம் வரலாற்று ரீதியாக சௌராஷ்ட்ரர்கள் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது அல்ல .  இதனால் சௌராஷ்ட்ரர்களின் வரலாறு மறக்கடிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் நிச்சயம் .
தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப சௌராஷ்ட்ரா மொழியை தெலுகு, தமிழ் போன்ற எழுத்துக்களில் எழுதி வருவதையும் நாம் பார்க்க இயல்கிறது.  இது முற்றிலும் நாம் சௌராஷ்டிரத்துடன் தொடர்பு இழந்து விட்டதை காட்டுகிறது.

ஆயினும் சௌராஷ்ட்ரா மொழி வளர்ச்சி என்பது வரலாற்று ரீதியாக ஆராய்ச்சி செய்து, அவ்வெழுத்தின் வளர்ச்சியுடன் கூடிய அடிச்சுவற்றில் மொழி வளர்ச்சி அமையுமாயின் நமது காலாச்சார வரலாறு பாதுகாக்கப்படும் ... வேறு வழிகளில் தேவநாகரி எழுத்து தவிர்த்த எழுத்துக்களில் மொழி வளர்ச்சி என்று முயற்சிகள் எடுப்பது நமது கலாசார வரலாறு, அழிக்கப்பட்டு நம்மை  வரலாற்றில் அனாதையான இனமாக சித்தரிக்கவே பயன்படும்.