ஐம்பத்தாறு தேசங்களின் அக்கால அரசியல் நிலவரங்களை கூறும் "புராதன இந்தியாவில் அரசியல்" என்ற புஸ்தகம் பொன்கொடி பதிப்பகம் சென்னை முதல் பதிப்பு 2000 இல் சௌராஷ்டிரா தேச அரசியல் நிலைமைகளை கூறி உள்ளது. புராதன காலம் எனில் முஸ்லிம்கள் படையெடுத்து வந்து நிலை பெற்றதற்கு முந்தி இருந்த இந்தியாவை குறிப்பதாகும். இதனை புராதன இந்தியாவின் முற்பகுதி, பிற்பகுதி என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். அலக்ஸாண்டர் படைஎடுப்போடு முற்பகுதி நிறைவு பெறுகிறது. அந்த முற்றுப் பெற்ற நிலையில் இருந்து தொடக்கி முஸ்லிம்கள் ஆதிக்கங் கொள்ள ஆரம்பித்தது வரை, கி. பி. பன்னிரண்டாம் நுற்றாண்டு வரை பிற்பகுதி என்று பிரித்து உள்ளார் நூலசிரியர் சுவாமிநாத சர்மா. இதில் சௌராஷ்டிரா தேச அரசியல் நிலவரம் பற்றி கூறுவதாவது :
" காம்போஜர், சுராஷ்டிரர் ராஜ்யங்கள் : இந்த இரண்டு ராஜ்யங்களிலும், பிரஜைகளனைவரும் ராணுவப் பயிற்சி பெறவேண்டும் என்ற கட்டாயம் இருந்தாதகத் தெரிகிறது. அதாவது பிரஜைகளெல்லோரும் போர்வீரர்களாயிருந்தார்கள் . இதனால் இவர்கள் விவசாயத்தையோ மற்ற தொழில்களையோ புறக்கணித்து விடவில்லை. அவற்றிலும் வல்லவர்களாகயிருந்தார்கள். இவர்களுடைய ராஜ்யத்தில் செல்வம் கொழித்து இருந்தது என்பதை நாம் சொல்லத் தேவை இல்லை. "
உலகின் முதல் செயற்கை ஏரி - சௌராஷ்ட்ரத்தின் சுதர்சனம் பற்றிய விவரங்களும், ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்பதாவதாகவும்; சௌராஷ்டிரா தேசம் இப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment