Showing posts with label palkar. Show all posts
Showing posts with label palkar. Show all posts

Monday, May 23, 2011

Indian Politics of Ancient Sourashtra Nation

ஐம்பத்தாறு தேசங்களின் அக்கால அரசியல் நிலவரங்களை கூறும் "புராதன இந்தியாவில் அரசியல்" என்ற புஸ்தகம் பொன்கொடி பதிப்பகம் சென்னை முதல் பதிப்பு 2000  இல் சௌராஷ்டிரா தேச அரசியல் நிலைமைகளை கூறி உள்ளது.  புராதன காலம் எனில் முஸ்லிம்கள் படையெடுத்து வந்து நிலை பெற்றதற்கு முந்தி இருந்த இந்தியாவை குறிப்பதாகும்.  இதனை புராதன இந்தியாவின் முற்பகுதி, பிற்பகுதி என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்.  அலக்ஸாண்டர் படைஎடுப்போடு முற்பகுதி நிறைவு பெறுகிறது.  அந்த முற்றுப் பெற்ற நிலையில் இருந்து தொடக்கி முஸ்லிம்கள் ஆதிக்கங்    கொள்ள  ஆரம்பித்தது வரை, கி. பி. பன்னிரண்டாம் நுற்றாண்டு வரை பிற்பகுதி என்று பிரித்து உள்ளார் நூலசிரியர்    சுவாமிநாத சர்மா.  இதில் சௌராஷ்டிரா தேச அரசியல் நிலவரம் பற்றி கூறுவதாவது :
" காம்போஜர், சுராஷ்டிரர் ராஜ்யங்கள் :  இந்த இரண்டு ராஜ்யங்களிலும், பிரஜைகளனைவரும் ராணுவப் பயிற்சி பெறவேண்டும் என்ற கட்டாயம் இருந்தாதகத் தெரிகிறது.  அதாவது பிரஜைகளெல்லோரும் போர்வீரர்களாயிருந்தார்கள் .  இதனால் இவர்கள் விவசாயத்தையோ    மற்ற தொழில்களையோ  புறக்கணித்து விடவில்லை.  அவற்றிலும் வல்லவர்களாகயிருந்தார்கள்.  இவர்களுடைய ராஜ்யத்தில் செல்வம் கொழித்து இருந்தது என்பதை நாம் சொல்லத் தேவை இல்லை.  "
உலகின் முதல் செயற்கை ஏரி - சௌராஷ்ட்ரத்தின்    சுதர்சனம் பற்றிய விவரங்களும், ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்பதாவதாகவும்; சௌராஷ்டிரா தேசம் இப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, May 7, 2011

Godess Angalaamma Prefered Cloths Woven by Sourashtra people

சௌராஷ்டிரர்கள் நெய்த ஆடைகளை உடுத்த சமர்பிக்கும்படி அருள்வாக்கு  கூறிய அங்காளம்மன் கோவில்
.


நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள பழையபாளையம் என்ற ஊரில் ஏரியின் எதிரில் இருக்கும் அங்காளம்மன் கோவில் அம்மன் தான்; சௌராஷ்டிரர்களை சேலை சமர்பிக்கும்படி அருள் வாக்கு கூறிய அன்னை. அன்னையின் அருள் வாக்கினை படமாக கோவிலின் உள் சித்தரித்து வைத்துள்ளனர். கிழிந்த ஆடையுடன் உள்ள அன்னை சௌரஷ்டிரர்களிடம் சேலை கேட்டு அருள் வாக்கு கூறிய செய்தி அவ்வோவியத்தில் உள்ளது. மேலும் இந்த அங்காள அன்னைக்கு உலக்கை சத்தம் ஆகாது என்பதால் ஊருக்கு வெளியே கோவில் கொண்டுள்ளாள். கோவிலின் அருகில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு எந்த வீடும் இல்லை. வீடு, காடு இருந்தால் தானே நெல் குத்தும் உலக்கை சத்தம் கேட்பதிற்கு. !!

கோவில் பூசாரி சௌராஷ்டிரர்களை தேடி அணுகி அருள் வாக்கை கூறினார்.  அன்றிலிருந்து சௌராஷ்டிரர்களில், சேலம் நாமக்கல் வட்டாரத்தில் உள்ளவர்கள், அருள் வாக்கை கேட்ட சில கோத்திரத்தார் மட்டும் இக் கோவிலில் தங்களின் பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்துகின்றனர். அம்மனுக்கு அடிக்கடி தங்களால் இயன்றபோதெல்லாம் சேலை சமர்பிக்கின்றனர்.
எப்பொழுதில் இருந்து இந்த ஆடை சமர்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது என்று சரியாக தெரியவில்லை.  நினைவு தெரிந்த நாளில் இருந்து இதனை செய்து வருகிறோம் என்கின்றனர் சமர்பிக்கும் சௌராஷ்டிரர்கள்.  சுற்று வட்டாரத்தில் இருக்கும் முஸ்லிம்களும் இக்கோவிலுக்கு வந்து பலி பூசையிட்டு வணக்கிச் செல்வதை பார்க்க முடிகிறது. 

அங்காளம்மன் தியானம் :


எகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம் !

ஜ்வாலகேசாம் கரலாஞ்ச தக்ஷிணே நகர குண்டலாம் !!

வாமகர்ணே பத்ர பூஷாம் சர்வாபாரண பூஷிதாம் !

பாச சூல கபாலோக்ர டங்க ஹேதி விராஜிதாம் !!

பிதாம்பாரதராம் வ்ருஷ்டாம் கங்காள பரமேஸ்வரீம் !

வந்தே சதுர்புஜமுக்ராம் குங்குமாபாம் சுபாப்ரதாம் !!



அங்காளம்மன் காயத்ரி :

ஓம் காம் கங்காள்யை ச வித்மஹே ஜ்வாலா கேஸாய ச தீமஹீ !

தன்னோ தாத்ரீ ப்ரசோதயாத் !!