Thursday, August 23, 2018

சௌராஷ்ட்ராவின் ஓலைச் சுவடிகள்

இது இருபத்தோராம் நூற்றாண்டு.  கி பி 2018  ம் வருடம்.  தமிழக சௌராஷ்ட்ரா மக்கள் சுமார் அறுநூறு முதல் எண்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்தனர் என்று கணிக்கப்படுகிறது.  அப்படியானால் கி பி 12 ம் நூற்றாண்டு முதல் சௌராஷ்ட்ரர்களின் புலம் பெயர்வு நிகழ்வு நடைபெற்றது என்று கூறலாம்.   இன்றைய சௌராஷ்ட்ரா நிலப்பகுதி குஜராத் மாநிலத்தின் ஒரு அங்கமாக உள்ளது.  குஜராத்தில் ( சௌராஷ்ட்ரா பகுதி உள்பட ) 12 ம் நூற்றாண்டில் மக்கள் பேசிய மொழி " பழைய குஜராத்தி " என்றும் பழைய குஜராத்தி மொழியின் எழுத்து வடிவம் தேவநாகரி என்றும் அறியப்படுகிறது.  தேவநாகரி எழுத்தில் பழைய குஜராத்தி 12 நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டு உள்ளதற்கான ஓலை சுவடி ஆதாரங்கள் உள்ளன.
ஸ்ரீ பாலா மன்னரின் தேவி பூஜை - ஓலை சுவடி

மகாவீரரின் பிறப்பு - ஓலைச்சுவடி


உபதேச மாலை  - ஓலைச்சுவடி
இச்சுவடிகள் கி பி 12  நூற்றாண்டு முதல் 16 நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தவை.  பழைய குஜராத்தி மொழியில் எழுதப்பட்டவை.  இவைகளில் தேவநாகரி எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டு உள்ளன.  தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த சௌராஷ்ட்ரர்களில் படிப்பறிவு பெற்றவர் இருந்து இருந்தால் இத் தேவநாகரி எழுத்துக்களையே தமது எழுத்துருவாக கொண்டு வந்து இருப்பர்.  ஆயினும் தமிழக புலம் பெயர் சௌராஷ்ட்ரர்கள் தேவநாகரி எழுத்தில் எழுதிய ஓலை சுவடிகள் கிடைத்ததாக தெரியவில்லை .

எப்படியாயினும், பிற்காலத்தில் தமிழகம் ஆந்திர மாநிலத்தோடு ஒன்றிணைந்து இருந்த போது தெலுகு மொழி பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழியாக இருந்தது.  தமிழக சௌராஷ்ட்ரர்களும் தெலுகு மொழி பள்ளிகளில் பயின்றனர்.  (  இன்றும் கி பி 1800 -1900 நூற்றாண்டு முன்பகுதி வரை தெலுகு மொழியில், தெலுகு எழுத்தில் எழுதப்பட்ட பல பழைய சொத்து பத்திரங்கள் தமிழகத்தில் காணலாம்.) பின்னர் தமிழகம் தனி மாநிலமாக உருவெடுத்தத்தில் இருந்து தமிழ் எழுத்துக்களை பயின்று பயன்படுத்தி வருகின்றனர்.

1 comment:

pathykv said...

Very authentic information. K.V.Pathy