சௌராஷ்ட்ரா ஆட்சியாளர்களின் நாணயங்கள் : சௌராஷ்ட்ரா ஜனபதா என்று அழைக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசமாக இருந்த காலகட்டத்தில் தங்க வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன .அந்த நாணயங்கள் " கர்ஷபணா" என்ற பெயரில் மக்களால் அழைக்கப்பட்டது
ஜனபதா காலத்திய நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளில் முத்திரை இடப்பட்டது போன்று காட்சியளித்தது. காலப்போக்கில் நாணயங்கள் சிறப்பான முறையில் வடிவம் பெற்றன. இந்த நாணயங்களில் ஸ்வஸ்திக் , ஸ்ரீ , யானை போன்ற சின்னங்கள் இடம் பெற்றன.
ஜனபதா நாணயங்களில் கோவில் கீழ்தள அமைப்புகளின் வடிவங்களும் இடம் பெற்று இருந்தன.
சௌராஷ்ட்ரா சமஸ்தானங்களில் ஒன்றான பரோடா பல நாணயங்களை வெளியிட்டுள்ளது .
|
பரோடா சமஸ்தான அரசரான கணபதி ராவ் வெளியிட்ட நாணயம் |
இந்த நாணயன்யங்கள் குஜராத் சௌராஷ்ட்ரா பகுதி அம்ரேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை.
|
பரோடா சமஸ்தான அரசர் காண்டே ராவ் வெளியிட்ட நாணயங்கள் |
|
பரோடா சமஸ்தான அரசர் மல்ஹர் ராவ் வெளியிட்ட நாணயங்கள் |
|
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள் |
|
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள் |
|
பரோடா சமஸ்தான அரசர் ஸாயாஜி ராவ்-3 வெளியிட்ட நாணயங்கள் |
|
நவநகர் சமஸ்தான அரசர் விபாஜி வெளியிட்ட நாணயம் |
இந்நாணயங்களில் தேவநாகரி எழுத்துக்களே காணப்படுகின்றன. சௌராஷ்ட்ரத்தை ஆக்கிரமித்த முஸ்லீம் ஆட்சியாளர்களின் நாணயங்களில் மட்டும் அரபி எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஆகவே வரலாற்று காலம் முதல் ஆங்கிலேயரிடம் சுதந்திரம் பெறும் வரை நாணயங்களில் தேவநாகரி எழுத்துக்களே காணப்படுகின்றன. இந்த ஆதாரங்களில் இருந்து சௌராஷ்டிர மொழிக்கும் தேவநாகரி எழுத்தே பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.
1 comment:
தற்சமயம் பரோடாவில் எந்த லிபி உபயோகத்தில் உள்ளது?
Post a Comment