ப4வா - என்ற சௌராஷ்டிர வார்த்தை -
சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இந்த வார்த்தையின் அர்த்தம் பல புதிய விளக்கங்களை தரும்.
பொதுவாக சௌராஷ்டிரர்கள் அனைவரும் ஆண்களுக்கான விளிச் சொல்லாக இந்த ' ப4வா ' என்ற வார்த்தையை உபயோகிப்பர். மேலும் தங்கள் உடன் பிறந்தவளின் கணவனையும் ' ப4வா' என்று அழைப்பர்.
' ப4வ ' (Bhavaa ) என்ற வார்த்தை, ' ஆகியவனே ' என்று பொருள் தரும். ' தீ3ர்க்க சுமங்கலி ப4வ' என்றால் நெடுநாள் கணவனுடன் இருக்கும்படி ஆகுக ' என்று பொருள்.
இதை விரிந்த பொருளில் நோக்கும்போது; ' சரவண பவ ' என்ற சடாக்ஷர மந்திரத்தில் உள்ள - பவ - என்ற சொல் எப்படி பொருள் தருகிறது?
" சரவண - என்று ஆகியவனே !
அதாவது, சரவண என்ற பொய்கையில் உருவாக ஆகியவனே - என்று !
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம் பொருள் ' ப4வம் ' என்கிற இந்த உலகாயும் ஆகியவன் ! மேலும் அந்த ' பவம் ' என்று குறிப்பிடப்படும் இவ் உலகில்
' சரவண ' என்ற உருவாய்; சரவண என்ற பெயரில் பிறந்தவனே ! என்று பொருள் தருகிறது சடாக்ஷர மந்திரம்.
ஆக ' ப4வ ' என்று ஒருவனை பார்த்து நாம் விளித்தால், அது இந்த உலகில் உரு ஆகியவனே - உரு எடுத்து வந்தவனே ... என்று பொருள்.
சிவனுக்கும் ' பவன் ' என்று ஒரு பெயர் உண்டு .
இந்த ' பவ ' என்ற சௌராஷ்டிர வார்த்தை, நமது ஆழ்ந்த ஆத்மிக ஞானத்தை குறிப்பிடுகிறது. ' ப4வண் ' என்ற சௌராஷ்டிர வார்த்தையை நாம் ' பிராமணர்' களை குறிக்கும் சொல்லாக உபயோகப் படுத்தினாலும் , ' பிராமணன் ' என்ற வார்த்தையின் பொருள் என்ன? ' பிரம்மமாக ஆகியவன் ' !
பிரம்மம் என்றாலே அதற்க்கு உருவம் கிடையாது. எனவே சௌராஷ்டிர மொழியில் நாம் உபயோகப் படுத்தும் ' பவ' என்ற வார்த்தை - ' பிராமண ' என்ற வார்த்தைக்கு நிகர்-அல்ல என்பது மட்டும் அல்ல, அதற்க்கு நேர் எதிரான பொருள் கொண்டதும் கூட ! ஆயினும் நாம் ' பவண்' என்ற வார்த்தயை பிரமணர்களை குறிக்க உபயோகப் படுத்துகிறோம் ! உருவம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லாம் ஒன்று தான் என்கிறீர்களா ? அதுவும் சரிதான் !