Saturday, September 26, 2020

நூறு மொழிகளின் நாடு - சௌராஷ்டிரம்



உண்மை சம்பவம் கதை  :

சௌராஷ்டிர தேச மன்னனுக்கு ஒரு விசித்திர பிரச்னை ஏற்பட்டது.  அது நாட்டின் அடுத்த ராஜா யார் என்று நிர்ணயிக்க வேண்டிய நேரம்.  ராஜாவுக்கோ முதல் மகன் தத்து பிள்ளை.  இரண்டாவது மகன் சொந்த பிள்ளை.  தத்து பிள்ளையின் உறவினர்களும் ராஜாவுக்கு தீவிர விசுவாசிகள், நன்கு ராஜ்யத்திற்கு பொருள் ஈட்டி தருபவர்கள், காவல் செய்பவர்கள்.  

இங்கு தான் குழப்பம்.  இரு மகனில் யாருக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்வது ? இரவு முழுதும் பலவிதங்களில் யோசனை செய்தவர், காலையில் நாட்டினை இரண்டாக பிரித்து இரு மகன்களையும் ஒரு பகுதிக்கு அரசனாக ஆக்க தீர்மானித்து அவையில் கூறி நிறைவேற்றியும் விட்டார்.

சுமுகமாக அனைவரும் ஏற்றுக்கொண்டு இரு மகன்களும் நன்கு அரசாட்சி செய்வது கண்டு பொறுப்புகள் அனைத்தும் துறந்து, தல யாத்திரை புறப்பட்டு விட்டார்.

ஆண்டுகள் உருண்டோடின.  இரு மகன்களும் தத்தம் பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.  ஆயினும் ஒரே நாடாக இருக்கையில் அரசுக்கு வந்த வருவாய் தற்போது இல்லை.   இருவருமே தனித்தனியே யோசித்து  பார்த்து, பாதி நாட்டில் இவ்வளவு தான் வருவாய் வருமோ  என்று கணக்கிட்டு விடுவது என்று தீர்மானித்தனர்.  இரு ராஜாக்களும் சந்தித்தனர், தத்தமது வருவாய்களை கணக்கிட்டனர்.  தந்தை காலத்தில் வந்த வருவாயை விட குறைவதை கண்டு திடுக்கிட்டனர்.  தற்போது பிரஜைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருக்கையில் எப்படி வருவாய் குறைகிறது ?  

வரி வசூலிப்பவர்கள் ஏமாற்றுகிறார்களோ ? சந்தேகம் கிளம்பியது.  

தங்களது அந்தரங்க ஒற்றர்களை அனுப்பி சோதிக்க சொன்னார்கள் இரு ராஜ்யத்திலும்.!!

முடிவு ..... ?

முடிவும் விசித்திரமாக வெளிவந்தது.

பெரும் தனவந்தர்கள், வரி வசூல் செய்பவர்களிடம், வரி கட்டாமல் ஏமாற்றி வந்ததை அறிந்த ஒற்றர்கள், வரி வசூல் அதிகாரிகளை மன்னர்களின் முன் கூடும் படி ஆணையிட்டனர்.

* வரி வசூலிப்பதில் என்ன பிரச்னை அதிகாரிகளே ?

* பிரச்னை ஏதும் இல்லை மன்னா ... ஆனால்....

* என்ன ஆனால் ?  கர்ஜித்தனர் இரு மன்னர்களும் ..

மன்னா மன்னிக்க வேண்டும், நாங்களும் ஏமாந்து விட்டோம்.  எப்படி எனில், தனவந்தர்களிடம் வரி வசூலிக்க செல்கையில் நான் பக்கத்துக்கு நாட்டு பிரஜை, அவர் உங்கள் நாட்டு அரசரின் சகோதரர் தான்.. அங்கு தான் நான் வரி கட்டுகிறேன், என்று இருநாட்டு வரிவசூலிப்பவர்களிடமும் மாற்றி மாற்றி கூறி வரி கட்டாமல் இருந்து வந்ததை அறிந்தோம். ஒற்றர்கள் எங்களை விசாரிக்க வந்த பின்னர் தான்  இரு நாட்டிலும் வரி வசூலிப்பவர்களும் கலந்து பேசி பின்னர் இதனை கண்டுபிடித்தோம் மன்னா.  இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை,   தங்கள் தான் இதற்கு தக்க உபாயம் தர வேண்டும்.

* மன்னர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்.  அரண்மனை, நகரத்திலேயே இப்படி என்றால், எல்லை பகுதிகளிலும் நிலைமை இன்னும் மோசமாக வரி வசூல் ஆகாத நிலையே காணப்பட்டதை அறிந்தனர்.

* தங்கள் தந்தை காலத்தில் இருந்து தொடரும் குரு, மந்திரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

* ஆலோசனையில் பிரச்னைதான் அனைவருக்கும் புரிந்ததே தவிர, அதற்கான தீர்வு யாருக்கும் தெரியவில்லை. !

* இந்நிலையில் ஒரு பண்டிதர் தான் ஒரு தீர்வு வைத்துள்ளதாகவும், மன்னர் அனுமதித்தால் விளக்குவதாகவும் தெரிவித்தார்.

* இரு மன்னர்களும் பண்டிதரின் தீர்வை விளக்குமாறு பணித்தனர்.

* பண்டிதர் கூற ஆரம்பித்தார்.

மன்னர்களே, இதே போன்றதொரு நிலைமை முன்னொரு காலத்தில் பகவான் கிருஷ்ணர் சௌராஷ்டிர தேசம் ஆளுகையில் ஏற்பட்டது.  பகவான் கிருஷ்ணர் இதற்க்கு தீர்வு கண்டிருந்தார்.

அதாவது நான் சொல்ல வருவது. நமது மொழியை இரண்டாக பிரிக்க வேண்டும். என்கிறார்.

* என்ன பண்டிதர் உளறுகிறீர் ? நாட்டை, சொத்தினை பிரிக்கலாம், மொழியை எப்படி பிரிப்பது ?

* மன்னர்களே, மகாவிஷ்ணு அம்சம் என்று கூறுமளவிற்கு "பாணினி" என்ற புலவர் முன்னொரு காலத்தில் இப்படி மொழிகள் ஆறு பெரும் பிரிவாக , பிராகிருத மொழிகள் என்று பிரிந்து இருந்தது அல்லவா ? அப்போது, அந்த மொழிகளை ஒற்றுமைப்படுத்தும் விதத்தில் " சமஸ்கிருதம் " என்ற மொழியினை உருவாக்கி, அதனை நிர்வாக மொழியாகவும், பயன்படுத்த தீர்வும் தந்தார்.  அம்மொழியை கணித சூத்திரங்கள் அடிப்படையில் இணைத்து அமைத்தார் அல்லவா ?  அதையே இப்போது மீண்டும் தலைகீழாக செய்யப்போகிறோம்.  அதாவது, மொழியினை இரண்டாக பிரித்து இரண்டு தேசத்திற்கும் வெவ்வேறு மொழி என்று அடையாளம் செய்து விடலாம்.  அந்த மொழியினை அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு குல குருவும், பொது மக்களுக்கு கோவில் பண்டிதர்களும் போதிப்பர்.  ஓரிரு வருடங்களில் இரு நாட்டிற்கும் வெவ்வேறு மொழியாக அடையாளம் பெற்று விடும்.  அதன் பின்னர், பேசும் மொழியை வைத்து " பிரஜையானவர் " எந்த நாட்டினை சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டுகொண்டு, அவர் எங்கு வரி செலுத்த வேண்டும், என்று ஏமாறாமல் தீர்மானித்து விடலாம்.  

* ஆனால் முக்கிய விஷயம் ஒன்று,  இந்த மொழியினை இரண்டாக உடைப்பதன் காரணத்தை ரகசியமாக வைக்க வேண்டும். இல்லையெனில் பயன் ஏற்படாது என்றார். !!

* மேலும் எதிர் காலத்தில் இரு நாடுகளும் இணைந்தால் பாணினி பயன்படுத்திய அதே சூத்திரத்தை வைத்து இரு நாட்டு மொழிகளையும் இணைத்து விடலாம் என்றார். !! ( இணைப்பதற்கான வாய்ப்பு ஆங்கிலேயர் காலம் வரை வரவே இல்லை ! ஒரு சில மொழிகளின் இணைப்பு தவிர !! )

* இரு மன்னர்களும் ஆலோசித்து, இரு நாட்டு பிரஜைகளும் தோற்றத்திலும், உடை, கலாச்சாரத்திலும் ஒரே மாதிரி இருப்பதால், எந்த நாட்டை சேர்ந்த பிரஜை என்று கண்டறிவதில் சிரமம் உள்ளதை அறிந்து, பண்டிதரின் தீர்வினை ஏற்று; 'மொழியை' இரண்டாக பிரிப்பதாக தீர்மானித்தனர்.

* பண்டிதர்களும் பாணினி கணித சூத்திரங்கள் அடிப்படையில் மொழியை கட்டமைத்து இருந்ததால், அதே சூத்திரங்கள் அடிப்படையில், '-ஒரே இரவில் புதுமொழி ஒன்று-' உருவாக்குவது எளிதானது.

* வெற்றிகரமாக பண்டிதர்கள் இதனை செய்து முடித்தனர்.  அரசுக்கு வருவாயும் பழைய நிலைக்கு திரும்பியது.! 

* இந்த மொழியினை இரண்டாக உடைக்கும் "ராஜ தந்திரம்" அதன் பின்னேற்பட்ட காலங்களில் மன்னர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் மீண்டும் ராஜ்ஜியங்கள் பிரிந்து கொண்டே இருக்க; இருக்க , மொழிகளும் பலவாக பிரிக்கப்பட்டுக்கொண்டே வந்தது.  தொடர்ந்து ! ! ! ! 

###  *ஆங்கிலேயர் காலத்தில் சௌராஷ்டிர தேசத்தில் ஓவ்வொரு 300 கிமி சுற்றுப்பரப்பளவிற்கும் ஒரு ராஷ்ட்ரம், அதற்க்கு ஒரு தனி மொழி என்ற அளவில் மொழிகளின் எண்ணிக்கை பெருகி இருந்தது.  இவைகளில் பெரும்பாலான மொழிகள் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வந்தன.  சில தேவநாகரி போன்றே இருக்கும் மோடி எழுத்து, போன்ற எழுத்துக்களிலும் எழுதி வந்தனர்.

சுதந்திரத்திற்கு பின், குஜராத் மாநிலம் உருவாக்குகையில், மாநில மொழியாக ஒரு மொழியை ஏற்க வேண்டிய நிர்பந்தம் வந்தது.  அங்கோ பலப்பல மொழியாக மன்னர் காலத்தில் இருந்து மொழிகள் பிரிந்து கிடக்கிறதே ? என்ன செய்வது ? பலப்பல மொழிகளில் எதை மாநில மொழியாக ஏற்பது ? என்ற பிரச்னை வந்தது.

* இதன் தீர்வாக, சௌராஷ்டிர பகுதியில் உள்ள கிர்னார் என்ற வட்டார மொழியினை குஜராத் மாநில மொழியாக ஏற்பது என்றும், மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு "மராத்வாடா வட்டார மொழியை" மாநில மொழியாக ஏற்பது என்றும் முடிவானது. 

* இந்த முடிவு பல வட்டார மக்களுக்கு அதிருப்தி கொடுத்தது. சில வட்டார மொழியினர், தங்கள் வட்டார மொழியினையே மாநில மொழியாக அமுல் படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.  ஆயினும், மாநில காங்கிரஸ் அரசு இதனை சர்வாதிகார போக்கில் அணுகி, மக்களிடம் குஜராத்தி மொழியை அமுல்படுத்தி விட்டது.  இதனால் சவுராஷ்டிரா வட்டார மொழிகளில் ஒன்றான கிர்னார் வட்டார மொழியே குஜராத்தி மொழி என்று பெயர் பெற்று அமல் படுத்தப்பட்டது. மராத்வாடா வட்டார மொழி மராத்தி மொழி என்று பெயர் பெற்று அமுல் படுத்தப்பட்டது. 

* மொழிகளை ஆவணப்படுத்த யுனெஸ்கோ நிறுவனம் உலக அளவில் முயற்சி எடுத்ததனை அடுத்து. 

* ஆறு ஆண்டுகளுக்கு முன் குஜராத்தின் வட்டார மொழிகலிள் பல அழிந்து விட்டது கண்டு, மோடி அரசு இந்த மொழிகளை ஆவணப்படுத்த ஆணையிட்டது.

* பத்மஸ்ரீ கணேஷ் தேவி தலைமையிலான குழுவினை அமைத்து, மாநிலத்தில் இருந்த அழிந்தது, அழியாதது உட்பட அனைத்து வட்டார மொழிகளையும் ஆவணப்படுத்த கேட்டுக்கொண்டது.  

* தமிழகத்தில் பேசப்படும் சௌராஷ்ட்ரி மொழி சவுராஷ்டிரா தேசத்தில் எந்த வட்டாரத்தில் பேசப்பட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை.  விரைவில் கிடைக்கும் என்று நம்புவோமாக.

* எழுத்து : தெஸ்வான் பாஸ்கர், சேலம். 

அனைத்து சௌராஷ்டிர மக்களும் அறிந்து கொள்ள ஒரு  ஷேர் செய்யுங்கள். நன்றி.

1 comment:

Unknown said...

நமஸ்கார் ஜி good