Saturday, February 6, 2021

ஆபஸ்தம்ப சூத்திரம்



ஆபஸ்தம்ப சூத்திரம் - என்ற சமூக சட்டத்தின் அடிப்படையில் சௌராஷ்டிர ர்கள் வாழ்க்கை நடத்துக்குன்றனர் என்று சார்கள் ஷாட் என்ற கோத்ரா காண்ட புத்தகம் தெரிவிக்கிறது.

தன்னை நோக்கி சாபம் கொடுக்க வந்த மந்திர ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால் ஊர் பேர் துறந்த ரிஷிக்கு ஆபஸ்தம்ப ரிஷி  என்று பெயர் வந்தது.   ஆப என்றால் நீர்.  நீரை அந்தரத்தில் நிறுத்தியதால் ஆப-ஸ்தம்பர் .  இவர் இயற்றிய சமுதாய சட்ட புத்தகம் தான் ஆபஸ்தம்ப சூத்திரம்.  இது தவிர, போதாயனர் இயற்றிய போதாயன சூத்திரம், விஷ்ணு சூத்திரம், வஷிஸ்ட சூத்திரம், கௌதம சூத்திரம், யாக்ஞவல்கிய சூத்திரம் போன்ற பல சூத்திரங்கள்  உள்ளன.  இவை சமுதாய சட்டத்தை, ஆன்மிக வழியில் போதிப்பவை. 

இப்புத்தகம் விவாகத்தை 12 வகையாக கூறுகிறது.  

ஏழு எழாக வாழ்வின் நிலைகளை குறித்து, அவ்வாறு 15 வகையான ஏழு சேர்த்து 105 நிலைகளும் அதனுடன் படைக்கும் பிரம்மா அல்லது பிரஜாபதி, ஆண், பெண் ஆகியோரையும் சேர்த்து 108 என்று அனைத்து உயிர் இனங்களுக்கு பொதுமைப்படுத்திக் கூறுகிறது. அத்துடன் பெண்ணை உயர்வாக விவரிக்கிறது.  " பெண்ணே, போற்றப்படுபவளே, தர்மத்திற்கானவளே, அமைதியிலும் ஆற்றலிலும் பூமியாய், உற்பத்தியில் சூரியனாய், வாழ்வில் சவிதாவாய், ஞானத்தில் காயத்ரியாய், உணர்வில் சாமவேதமாய், செயலில் யஜுவாய், அணுவைக் காப்பதில் மூவுலகாய், என் குடும்பத்தை காக்க சர்வாங்க ஸ்வர்ண பூஷணி யாய் வருவாய்" என லக்ஷ்மிக்கு நிகராக விவரிக்கிறது.

 ஆபஸ்தம்ப சூத்திரம் என்ற சமூக சட்டத்தின் அடிப்படையில் சௌராஷ்டிர ர்கள் வாழ்க்கை நடத்துக்குன்றனர் என்று சார்கள் ஷாட் என்ற கோத்ரா காண்ட புத்தகம் தெரிவிக்கிறது.

இப்புத்தகம் விவாகத்திற்கு நிச்சயமான கன்னியை விவாதத்தின் போது புத்தாடை அணிவிப்பதை பற்றி "தரித்துணியில் இருந்து எடுக்கப்பட்ட புதிய ஆடையை மடிப்பு பிரித்து உதறி, மந்திர நீரால் தெளித்து, தந்தை மணமகனுக்கு, தாய் மணப்பெண்ணிற்கும் அணிவிக்க வேண்டும்.  அப்போது புரோகிதர் ரேவதி தேவதை. பருத்தியை கழற்றி பிரிக்க, கார்த்திகை தேவதை நூலாக்க, சக்தி தேவதை துணியாக நெய்ய, வஸ்திரதேவதை தேவைக்கேற்றவாறு வெட்ட, இத்துணியை சவிதா தேவி மற்றும் தேவர்கள் சுற்றியதால் மகிமை நிறைந்ததாக ஆயிற்று என்று மந்திர நீரால் தெளிக்க வேண்டும் என விவரிக்கிறது.



No comments: