Friday, August 17, 2018

சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்





மேலே காண்பவை  சௌராஷ்ட்ரா கிராமிய நடுகற்கள்.  வீரர்கள் மற்றும் சதி என்ற உடன்கட்டை ஏறிய பெண்கள் மற்றும் போர் சாகசம் நிகழ்த்தியவர்கள், மற்றும் சில சிறப்பு நிகழ்வுகளில் நிறுவப்பட்ட நினைவு தூண் சிலைகள் "நடுகற்கள்" எனப்படுகின்றன. இந்த நடுகற்களின்  வேறு பெயர்கள் "பாலியா" அல்லது "கம்பி" (Khambi ) எனப்படுகின்றன.  குஜராத்தில்; குறிப்பாக  சௌராஷ்ட்ரா பகுதியில் இந்த நடுகற்கள் அதிகம் காணப்படுகின்றன.

சௌராஷ்ட்ரா பகுதி தவிர, கட்ச், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நகர்பார்கர் போன்ற இடங்களிலும் இது போன்ற நடுகற்கள் காணப்படுகின்றன.

பாலியா - எனில் "பால" என்ற சொல்லில் இருந்து பிறந்த ஒரு வார்த்தை.  "கம்பி" (Khambi) என்றால் "தூண்" என்று பொருள்படும் வார்த்தை.  இவ் இரண்டு பெயர்களில் நடுகற்கள் சௌராஷ்ட்ராவில் அழைக்கப்படுகின்றன.
லோதால், தார், ஜூனாகாத், தாரங்கதாரா, போன்ற பகுதிகளில் அதிகமாகவும் சூரத் , அஹமதாபாத் (கர்ணாவதி) ஆகிய இடங்களில் சிலவும் காணப்படுகின்றன.
இந்நடுகற்களில், தேவநாகரி எழுத்துக்களில்; "நடுகற்கள்" யாருக்காக நிறுவப்பட்டது, எந்த வீர தீர செயலுக்காக நிறுவப்பட்டது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.  இந்த நடுகற்கள் காலம் கி பி பதிநோறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினேழாம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது.  சௌராஷ்ட்ரர்கள் கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று அனுமானிக்கப்படுகிறது.   எனவே கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த சௌராஷ்ட்ரர்கள் தேவநாகரி எழுத்தை பயன்படுத்தி வந்திருப்பார் என்பது கண்கூடு.  சிலர் வேறு எழுத்தை சௌராஷ்ட்ரா மொழியை எழுத பயன்டுத்தினாலும் அவைகள் எல்லாம் வரலாற்று ரீதியாக சௌராஷ்ட்ரர்கள் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது அல்ல .  இதனால் சௌராஷ்ட்ரர்களின் வரலாறு மறக்கடிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் நிச்சயம் .
தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப சௌராஷ்ட்ரா மொழியை தெலுகு, தமிழ் போன்ற எழுத்துக்களில் எழுதி வருவதையும் நாம் பார்க்க இயல்கிறது.  இது முற்றிலும் நாம் சௌராஷ்டிரத்துடன் தொடர்பு இழந்து விட்டதை காட்டுகிறது.

ஆயினும் சௌராஷ்ட்ரா மொழி வளர்ச்சி என்பது வரலாற்று ரீதியாக ஆராய்ச்சி செய்து, அவ்வெழுத்தின் வளர்ச்சியுடன் கூடிய அடிச்சுவற்றில் மொழி வளர்ச்சி அமையுமாயின் நமது காலாச்சார வரலாறு பாதுகாக்கப்படும் ... வேறு வழிகளில் தேவநாகரி எழுத்து தவிர்த்த எழுத்துக்களில் மொழி வளர்ச்சி என்று முயற்சிகள் எடுப்பது நமது கலாசார வரலாறு, அழிக்கப்பட்டு நம்மை  வரலாற்றில் அனாதையான இனமாக சித்தரிக்கவே பயன்படும். 

5 comments:

Kondaa Senthilkumar said...

இக்கல்வெட்டில் தேவநாகரி எழுத்தில் ஸௌராஷ்ட்ரா மொழியில் எழுத்தப்பட்டுள்ளதா? என்ன எழுதப்பட்டுள்ளது என்று விவரித்தால் பலருக்கு நன்றாக பயன்படும் ஐயா...

pathykv said...

Sri Bhaskar, Please give source reference for this article. Please also post in Facebook.

Gnaneswaran S.D said...

Hello Bhaskar let me know the contents of the stone for further decision.

Unknown said...

தேவனாகரி லிபியில் எந்த மொழியில் (தென்னிந்தியாவில் பேசப்படும் சௌராஷ்ட்ரி /குஜராத்தில் பேசப்பட்ட சௌராஷ்ட்ரி/ குஜராத்தி), எந்த சம்பவத்தைக் குறித்து விளக்கப்பட்டுள்ளது என தெரிவித்தால் மிக்கப் பயனுள்ளதாய் இருக்கும்.

Unknown said...

2.47 AM comment written by Jagadisan Kuduva