Sunday, January 23, 2011

சேலத்திற்கு சௌராஷ்டிரர் வருகை

சேலத்திற்கு சௌராஷ்டிரர் வருகை  தந்த காலம் ஹொய்ஸல மன்னர் நிருப காம-2  என்பவர் காலத்தில், சேலத்திற்கு சௌராஷ்டிரர் வருகை தந்து இருக்க மிக்க வாய்ப்பு உண்டு.  ஏன் எனில் கஜனி முஹம்முத் சோமநாதபுர கொள்ளை அடிப்பு செய்த வருடம் 1026  ஜனவரி மாதம்.  அந்த கால கட்டத்தில் தென்னகம் நோக்கி வந்த சௌராஷ்டிரர்கள், மைசூர், சென்னபட்டினம், வழியாக சேலம் வந்து தங்கி இருக்க வேண்டும்.  இவர் காலத்தில் தான் ஹோயஷால வம்சம் துவங்குகிறது.  இவர் கர்நாடக கங்கா வம்ச மன்னர்களின் கீழ் குறு நில மன்னராக இருந்தவர். சேலம் மாவட்டம் பல காலம் கர்நாடக கங்கா வம்ச மன்னர்களின் கீழ் இருந்து உள்ளது.  சேலத்தில் முதல் அக்ரஹாரம் பகுதில் சௌராஷ்டிரர் பலர் வாழ்ந்து இன்று அதற்கு இணையான பட்டை கோவில், சிங்கமெத்தை , அம்மாபேட்டை, செவ்வாபேட்டை பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.  ஹோயஷல மன்னர் நிருப காம-2  ஆட்சி காலம் 1026 -1047  வரை.  இவர் சோழ மன்னர்களை எதிர்த்து இருந்தவர்.  சேலம் மாவட்டம், சேர, சோழ, பாண்டிய, ஹோயஷல மன்னர்களின் எல்லை நிலமாகவும், பல குறுநில மன்னர்களின் ஆட்சி களமாகவும் இருந்து உள்ளது.  எனவே ஆட்சி அடிக்கடி மாறும் நிலமாக சேலம் இருந்து உள்ளது.

தஞ்சாவூர், மதுரை போன்று மன்னர் மானிய நிலங்கள் அல்லது சலுகைகள் சேலம் சௌராஷ்டிரர் களுக்கு வழங்கப் பட்டது பற்றி எந்த ஆதாரமும் இதுவரை சேகரிக்கப் படவில்லை.  பொதுவாக ஆக்ராஹர்ரம் பகுதி, பிரமனர்களுக்கே மன்னர்களால் தானமாக வழங்கப் படும் பகுதிகள் ஆகும் என்பதும் கவனிக்கத் தக்கது.  வின்கார் எனப் படும் நெசவாளர் சாதி மக்களும் சௌரஷ்டிரர்களுள் முக்கியமானவர்கள்.  தமிழக சௌராஷ்டிரர் களுக்குள் சாதி பாகுபாடு இல்லை.  அல்லது சௌரஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள் என்ற அடிப்படியில், சாதி பார்க்காமல் உறவு வைத்து கொண்டு இன்று சௌராஷ்டிரர் என்ற ஒரே சாதியாக, பெரும்பாலும்  தென்னக, மற்றும் தமிழக பண்பாட்டை கடைபிடிக்கின்றனர்.  சௌராஷ்ட்ரி மொழி ஒன்றே சௌரஷ்ற்றதில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு அடையாளமாக உள்ளது.  மேலும் கர்நாடக வழியாக தமிழகம் வந்ததற்கு அடையாளமாக, " ஐதார்  ( ஞாயிறு கிழமை ), மத்தேள் - ( மிருதங்கம் ) " போன்ற கன்னட சொற்கள் சிலவும் சௌராஷ்ட்ரி மொழியில் கலந்து உள்ளது, தென்னகத்து மக்களோடு சௌராஷ்டிரர்கள் ஒன்றி விட்டதை காட்டுகிறது.  ஹோயஷல மன்னர்கள் புகழ் பெற்ற கர்நாடக கோவில்களான பேலூர், ஹளபேடு ஊர்களிலும், மற்றும் பெங்களூர் அருகே சோமநாதபுர கோவிலை கட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சௌரஷ்டிரத்தில் பிரபாஸ் படன் சோமநாத புறத்தில் உள்ள  ஸோமபுரி அக்ராஹரத்தில் இருந்து வருவதாக திருமண சம்பிரதாயங்களில் நிச்சயம் செய்யும் முன் பரஸ்பரம் சம்பந்திகள் ஆகப் போகும்  சௌராஷ்டிரர்கள் கூறிக் கொள்வர்.  இந்த கர்ண பரம்பரை தகவல்களே நாம் சோமநாத புறத்தில் இருந்து தென்னக வந்தவர்கள் என்று அறிய ஆதாரங்கள். 

உடையார் வம்ச அரசர்கள் :
ஹோயஷல மன்னர்களுக்கு பிறகு, மைசூர் உடையார் வம்ச அரசர்கள் சௌரஷ்டிரர்களை ஆதரித்து உள்ளனர்.  மைசூர் மகாராஜா பற்றிய கர்ண பரம்பரை செய்திகளும் இதனை உறுதிப் படுத்து கின்றன.  மைசூர் அரண்மனையில் தசரா விழா நடத்தப்படும் காலங்களில், சேலத்தில் இருந்து மைசூர் செல்லும் வழக்கம் இருந்து உள்ளது.  மைசூர் சென்று தன் மகாராஜாவை மரியாதையை செலுத்தும் பழக்கம் இருந்து உள்ளது.  காலப் போக்கில், சேலம் மைசூர் சாம்ராஜ்யத்தில் இல்லாவிட்டாலும், சௌராஷ்டிர நெசவாளர்களின் துணிகள் மைசூர் சமஸ்தானம் காலம் வரை ஆதரித்தே வந்துள்ளது. 
மைசூர் கோட் :
சில சௌராஷ்டிர குடும்பங்களில் இன்றும் பழைய கோட் ஒன்று காணப்படும்,  அது, தசரா சமயங்களில், அணிந்து செல்வதற்கு மட்டுமே என்று பிரத்யேகமாக அணியப்படும் கோட் ஆகும்.  அந்த கோட் இல்லாவிட்டால் மன்னரை சந்திக்க அனுமதி பெற இயலாது என்று, கோட் வைத்துள்ள குடும்பங்களின் கர்ண பரம்பரை செய்திகள் கூறுகின்றன.  தசரா விழாவில் கலந்து கொள்ள சேலத்தில் இருந்து சௌராஷ்டிர நெசவாளர்கள் தசரா சமயத்தில் மைசூர் சென்று விடும் பழக்கம் சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்துள்ளது.
மேல் காணும் மைசூர் அரண்மனையில் உள்ள தசரா ஓவிங்கள், கோட் அணிந்து விழாவில் கலந்து கொள்வதை உறுதிப் படுத்துகின்றன.

கோப்டா கத்தி :


தசரா விழாவின் போது; பல சாகச நிகழ்சிகள், பாடகர்களின் கச்சேரி, பஜனை குழுவினரின் இசை ஆகியவை நடைபெறும். பல்வேறு ஆயுதங்களை வைத்து போரிடுவது போலும், சிலம்பாட்டமும் மைசூர் தசரா நிகழ்ச்சியில் நடத்த சேலம் சௌராஷ்டிர வீர ஆஞ்சநேய தேகப்பியாச சிலம்ப சங்கத்தினர் தசராவில் நிகழ்த்துவார். இந்த நிகழ்ச்சியினை பாராட்டி மைசூர் மன்னரின் சார்பில் சிலம்ப சங்கத்திற்கு வழங்கப்பட்ட ' கோப்டா கத்தி ' என்ற கத்தி இன்றும் பாதுகாத்து வருகின்றனர் சங்கத்தினர்.
 
இந்த கோப்டா கத்தி கைகளில் அணிந்து கொண்டால் மணிக்கட்டினை சுழற்ற இயலாது.   கைகளும் கத்தி போல நேராக இருக்கும்.   இவ்வாறே அணிந்து சாகச நிகழ்ச்சி செய்து காண்பிக்கின்றனர்.

No comments: