Monday, January 4, 2010

Sourashtra Script (Alphabets) Declaration function

சமீபத்தில் சௌராஷ்ட்ர மொழிக்கு தேவநகரி எழுத்து அடிப்படியிலான எழுத்து மத்திய அரசு மொழி நிறுவனமான சென்ட்ரல் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியன் லாங்வேஜ், மைசூர் மூலமாக வெளியீடு நடைபெற்றது. 

தேவநகரி எழுத்து  என்றால் ஹிந்தி, சமஸ்க்ருதம் (हिंदी संस्कृत ) எழுத பயன்படும் எழுத்து தான்.  ஆனால் சௌராஷ்ட்ர மொழிக்கு என உள்ள சிறப்பு உச்சரிப்புகளுக்கென ஆறு எழுத்துக்கள் ஹிந்தி எழுத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளது.  கீழ் உள்ள  படம் பார்க்க.   இவைகள்  தான் சௌராஷ்ட்ர மொழி எழுத்துக்கள்.

   

இது போன்று சௌராஷ்ட்ர மொழியினை எழுத வேண்டும் என மாடல் காண்பிக்கப் பட்டு உள்ளது.   இதில் உயிர் எழுத்தில் எ, என்ற எழுத்து ஹிந்தி மொழியில் இல்லை.   அது சௌராஷ்டிர மொழியில் சேர்க்கப் பட்டு உள்ளது.   மற்றும் ல: ம: ந: ர: என்ற சிறப்பு சௌராஷ்ட்ர உச்சரிப்புகளுக்கு சிறப்பு எழுத்துகள் சேர்க்கப் பட்டு    உள்ளது.  இந்த லிபி பிரகடன விழாவில் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள்,  மத்திய அரசு அதிகாரிகள், சௌராஷ்ட்ர சமுக முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழாவின் அழைப்பு மடலை கீழே காணலாம்.




இவ்வாறு சீரும் சிறப்புமாக சௌராஷ்ட்ர மக்களின் பிரதிநிதி ஆகிய சௌராஷ்ட்ர மத்ய சபை பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான சௌராஷ்ட்ர பொது மக்கள் முன்னிலயில் பாளையங்கோட்டை ஐ ஐ பி எம் உயர் நிலை பள்ளியில் நடை பெற்ற விழாவில்  தேவநகரி எழுத்து ஏற்று கொள்ளப்பட்டது.   தமிழக பள்ளிகளில் மொழிவாரி சிறுபான்மை நல துறை மூலமாக சௌராஷ்ட்ர மொழி கற்பிக்க வேண்டி பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.   மத்திய அரசில் சிறுபான்மை மொழி பட்டியலில் நமது சௌராஷ்ட்ர மொழி இல்லை.  இந்த எழுத்து பிரகடந விழாவில் மத்திய அரசு பட்டியலில் நமது சௌராஷ்ட்ர மொழி சேர்க்கப் படும் என தெரிவிக்கப் பட்டது.   அப்படி சேர்க்கப் பட்டால் சௌராஷ்ட்ர மொழிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

No comments: