இதனை ஒட்டி சில கேள்விகள் எழுந்து உள்ளது. சிலர் ராமாராய் எழுத்துரு சௌராஷ்ட்ர மொழியை எழுவதற்கு பிரச்சாரம் செய்து வந்த நிலையில், ஏன் ஹிந்தி எழுத்தை சௌராஷ்ட்ர மொழி எழுத பயன்படுத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனை ஒட்டி சில விளக்கங்கள் தருகிரேன்.
சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னரே சௌராஷ்ட்ர மடிய சபையில் விவாதங்கள் நடை பெற்று நமது சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துருவாக தேவநகரி எழுத்தே உரியது. நமது பாரம்பரியத்திற்கு உகந்ததும் நமது சௌராஷ்ட்ர மொழி உச்சரிப்பிற்கு உள்ள அனைத்து ஒலிகளும் தேவநகரி எழுத்தில் பிரதிபலிக்கப்படுவதால் அதனையே (அதாவது ஹிந்தி எழுத்தையே ) நாமும் உபயோகபடுத்தலாம் என தீர்மானம் இயற்றினர். ஆனால் தமிழ் நாட்டில் அன்று இருந்த ஹிந்தி எதிர்ப்பு நிலை காரமணாக அதனை செயல் படுத்துவதில் சிரமம் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் ராமராய் எழுத்தை சிலர் பிரசாரம் செய்வதில் வெற்றி கண்டனர் சிலர்.
அவர்களுக்கு ஒரு கேள்வி. ஒரு பேச்சுக்காக இன்னும் இருநூறு ஆண்டு கழித்து ராம ராய் தெலுங்கு எழுத்தினை சீரமைத்து உருவாக்கிய எழுத்தினை விட்டு ஒருவர் ஆராய்ச்சி செய்தால், நம்மை அவர் " இவர்கள் விஜயநகர் பேரரசு வந்து பின் தமிழகம் வந்தவர்கள், இவர்களது எழுத்து தெலுங்கு எழுத்து போல வுள்ளது, இவர்கள் தெலுங்கு மற்றும் சொசுராஷ்டிரா மக்களின் கலப்பினமாவார்கள்" என்று முடிவு செய்தால் அதனை எப்படி மறுக்க முடியும்? அவர்களுக்கு ஒரு தகவல் கீழே வுள்ள படத்தில் உள்ளது. எப்படி தேவநகரி எழுத்து சௌராஷ்ட்ர மொழிக்கு இயல்பாகவே பொருந்தும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்திய மொழிகளின் எழுத்துருக்கள் வம்சாவளி படம். பிரம்மி எழுத்தில் இருந்து நகரி எழுத்து வரை வாருங்கள். அங்கு நமது சௌராஷ்ட்ர பகுதி இருக்கும் இடத்தில் என்ன எழுத்து இருக்கிறது என்று பாருங்கள். இன்று குஜராத்திலும், மகாராஷ்ட்ரவிலும் தேவநகரி எழுத்து தானே உபயோகப் படுத்தப்படுகிறது? நமது தாய் நிலமான சௌராஷ்ட்ர வில் தேவநகரி எழுத்து உபயோகத்தில் இருக்க நாம் இங்கு வேறு எழுத்தி ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? தெலுங்கு எழுத்தை சீரமைத்து எழுதுவது சௌராஷ்ட்ர மொழியின் நீண்ட பாரம்பரியத்திற்கு அது பொருந்துமா? நமது பழமையை அது வேர் அறுத்து விடாதா?
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது சௌராஷ்ட்ர சமஸ்தான மன்னர்கள் உபயோகப்படுத்திய தபால் கார்டினை பாருங்கள் . அதில் தேவநகரி எழுத்து தானே உபயோகித்து உள்ளனர்?
மேல் கோடு இடப்படாமல் இருக்கும் தேவநகரி எழுத்து அச்சில் உள்ளது. இந்த பாரம்பரியத்தை ஏன் நம்மில் சிலர் அறுக்க விரும்புகிறார்கள்?
No comments:
Post a Comment