Giving details about Sourashtra language and people of Tamil nadu, India. Sourashtra community of Tamil Nadu, migrated from Saurashtra region at least 1000 years before.
Friday, February 6, 2026
சிந்து சமவெளி "கூடை முறுக்கு"
சிந்து சமவெளி (Indus Valley) காலம் முதல் இன்றைய 2026 வருடம் வரை காலம் உருண்டோடி விட்டன.
வாழ்க்கையில் பயன்படும் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆயினும், பழைய சில விஷயங்கள் தொடர
செய்கிறது. சிந்து சமவெளியில் களிமண்ணால் செய்யப்பட்ட "கூடை" என்று டெல்லி (Indus valley basket)
மியூசியத்தில் காட்சிப்படுத்த பட்டு இருக்கிறது. ஆனால் அது என் கண்ணுக்கு,
களிமண்ணால் செய்யப்பட்ட "முறுக்கு " விளையாட்டு பொருள் போல தெரிந்தது. ஆகவே இந்த
பதிவில், சேலம் சௌ. மக்களிடையே பாரம்பரியமாக உருவாக்கப்படும், " புட்க்கி சைலி "
(Pudgi chaili ) என்று அழைக்கப்படும் "கூடை முறுக்கு" உங்கள் பார்வைக்கு. எனக்கு
தெரிந்து இது போன்ற பலகாரம் இன்றைய குஜராத், மஹா, ராஜஸ்தான், பாக் சிந்து
பகுதியிலும் இல்லை. நம்மிடையே தொடரும் பழைய சமையல் முறைகளில் இதுவும் ஒன்று என
கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
இது போன்ற கருத்துக்களைக் கொண்டு நம்மை நாமே ஆய்வு செய்து தொல்லியல் துறைக்கும் தெரியப்படுத்தவும்.
இதேபோல் நம் மொழியில் அரிடான் என்ற சொல் ஆய்வுக்கு உட்படுத்தி வெளியே எடுத்து எடுத்து வந்து விளக்க வேண்டும். நாம் ஆரியர் அல்லர் என்பது என் கருத்து. நன்றி
Post a Comment