விட்டிங்கி3
விட்டிங்கி3 - என்று சௌராஷ்டிர சிறுமிகள் முதல் பெண்கள் வரை விளையாடும் ஒரு நடனம் போன்ற விளையாட்டு உண்டு. இவ் விளையாட்டிற்கு விட்டிங்கி3 என்று சௌராஷ்டிர மொழியில் கூறுவர்.
எதிர் எதிரே நிற்கும் இருவர் தங்களின் கைகளை வலது கையை எதிரே நிற்பவரின் இடது கைக்கும், இடது கையை எதிரே நிற்பவரின் வலது கைக்குமாக கை குலுக்குவது போல் பிடித்துக் கொள்வர். பின் வேகமாக கையை ஒருவருக் கொருவர் எழுதபடி சுழலுவர். சுழலும் பொது அப்படியே பின் நோக்கி குனிவர். இந்த நடனம் போன்ற விளையாட்டின் பொது பல சௌராஷ்டிர பாடல்கள் பாடுவர்.
என் சிறு வயதில் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. அப்போதே எந்த சௌராஷ்டிர பாடல்களும் முழுமையாக எவருக்கும் நினைவில் இல்லை. எனவே ' தி கோனே?, தி கோனே? ' என்று நினைவு படுத்தி சில வரிகள் நாணி கோணிக் கொண்டு பாடுவர். தற்போது எனக்கு அந்த பாடல்கள் எதுவும் நினைவு இல்லை. எனினும் அந்த விட்டிங்கி என்ற விளையாட்டு நம்மிடம் இருந்தது என்பதை நினைவு கூற எழுதுகிறேன்.
Vittingi is generally popular with the younger girls. They form pairs and then the two girls of each pair stand opposite each other holding each other's hands crosswise. Then they lift their heels and swing round and round on their toes. The movements gets faster and faster, the upper part of the body bends backward and the arms remain fully stretched. As the spinning gathers momentum, it creates an ecstasy and the girls go on and on till they reach the point of exhaustion. Even though they move very fast, they are very careful to maintain rhythm and keep singing various kinds of songs about the mother, the father, the brother, the mother-in-law and about various incidents connected with daily life.