Saturday, September 26, 2020

நூறு மொழிகளின் நாடு - சௌராஷ்டிரம்



உண்மை சம்பவம் கதை  :

சௌராஷ்டிர தேச மன்னனுக்கு ஒரு விசித்திர பிரச்னை ஏற்பட்டது.  அது நாட்டின் அடுத்த ராஜா யார் என்று நிர்ணயிக்க வேண்டிய நேரம்.  ராஜாவுக்கோ முதல் மகன் தத்து பிள்ளை.  இரண்டாவது மகன் சொந்த பிள்ளை.  தத்து பிள்ளையின் உறவினர்களும் ராஜாவுக்கு தீவிர விசுவாசிகள், நன்கு ராஜ்யத்திற்கு பொருள் ஈட்டி தருபவர்கள், காவல் செய்பவர்கள்.  

இங்கு தான் குழப்பம்.  இரு மகனில் யாருக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்வது ? இரவு முழுதும் பலவிதங்களில் யோசனை செய்தவர், காலையில் நாட்டினை இரண்டாக பிரித்து இரு மகன்களையும் ஒரு பகுதிக்கு அரசனாக ஆக்க தீர்மானித்து அவையில் கூறி நிறைவேற்றியும் விட்டார்.

சுமுகமாக அனைவரும் ஏற்றுக்கொண்டு இரு மகன்களும் நன்கு அரசாட்சி செய்வது கண்டு பொறுப்புகள் அனைத்தும் துறந்து, தல யாத்திரை புறப்பட்டு விட்டார்.

ஆண்டுகள் உருண்டோடின.  இரு மகன்களும் தத்தம் பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.  ஆயினும் ஒரே நாடாக இருக்கையில் அரசுக்கு வந்த வருவாய் தற்போது இல்லை.   இருவருமே தனித்தனியே யோசித்து  பார்த்து, பாதி நாட்டில் இவ்வளவு தான் வருவாய் வருமோ  என்று கணக்கிட்டு விடுவது என்று தீர்மானித்தனர்.  இரு ராஜாக்களும் சந்தித்தனர், தத்தமது வருவாய்களை கணக்கிட்டனர்.  தந்தை காலத்தில் வந்த வருவாயை விட குறைவதை கண்டு திடுக்கிட்டனர்.  தற்போது பிரஜைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருக்கையில் எப்படி வருவாய் குறைகிறது ?  

வரி வசூலிப்பவர்கள் ஏமாற்றுகிறார்களோ ? சந்தேகம் கிளம்பியது.  

தங்களது அந்தரங்க ஒற்றர்களை அனுப்பி சோதிக்க சொன்னார்கள் இரு ராஜ்யத்திலும்.!!

முடிவு ..... ?

முடிவும் விசித்திரமாக வெளிவந்தது.

பெரும் தனவந்தர்கள், வரி வசூல் செய்பவர்களிடம், வரி கட்டாமல் ஏமாற்றி வந்ததை அறிந்த ஒற்றர்கள், வரி வசூல் அதிகாரிகளை மன்னர்களின் முன் கூடும் படி ஆணையிட்டனர்.

* வரி வசூலிப்பதில் என்ன பிரச்னை அதிகாரிகளே ?

* பிரச்னை ஏதும் இல்லை மன்னா ... ஆனால்....

* என்ன ஆனால் ?  கர்ஜித்தனர் இரு மன்னர்களும் ..

மன்னா மன்னிக்க வேண்டும், நாங்களும் ஏமாந்து விட்டோம்.  எப்படி எனில், தனவந்தர்களிடம் வரி வசூலிக்க செல்கையில் நான் பக்கத்துக்கு நாட்டு பிரஜை, அவர் உங்கள் நாட்டு அரசரின் சகோதரர் தான்.. அங்கு தான் நான் வரி கட்டுகிறேன், என்று இருநாட்டு வரிவசூலிப்பவர்களிடமும் மாற்றி மாற்றி கூறி வரி கட்டாமல் இருந்து வந்ததை அறிந்தோம். ஒற்றர்கள் எங்களை விசாரிக்க வந்த பின்னர் தான்  இரு நாட்டிலும் வரி வசூலிப்பவர்களும் கலந்து பேசி பின்னர் இதனை கண்டுபிடித்தோம் மன்னா.  இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை,   தங்கள் தான் இதற்கு தக்க உபாயம் தர வேண்டும்.

* மன்னர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்.  அரண்மனை, நகரத்திலேயே இப்படி என்றால், எல்லை பகுதிகளிலும் நிலைமை இன்னும் மோசமாக வரி வசூல் ஆகாத நிலையே காணப்பட்டதை அறிந்தனர்.

* தங்கள் தந்தை காலத்தில் இருந்து தொடரும் குரு, மந்திரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

* ஆலோசனையில் பிரச்னைதான் அனைவருக்கும் புரிந்ததே தவிர, அதற்கான தீர்வு யாருக்கும் தெரியவில்லை. !

* இந்நிலையில் ஒரு பண்டிதர் தான் ஒரு தீர்வு வைத்துள்ளதாகவும், மன்னர் அனுமதித்தால் விளக்குவதாகவும் தெரிவித்தார்.

* இரு மன்னர்களும் பண்டிதரின் தீர்வை விளக்குமாறு பணித்தனர்.

* பண்டிதர் கூற ஆரம்பித்தார்.

மன்னர்களே, இதே போன்றதொரு நிலைமை முன்னொரு காலத்தில் பகவான் கிருஷ்ணர் சௌராஷ்டிர தேசம் ஆளுகையில் ஏற்பட்டது.  பகவான் கிருஷ்ணர் இதற்க்கு தீர்வு கண்டிருந்தார்.

அதாவது நான் சொல்ல வருவது. நமது மொழியை இரண்டாக பிரிக்க வேண்டும். என்கிறார்.

* என்ன பண்டிதர் உளறுகிறீர் ? நாட்டை, சொத்தினை பிரிக்கலாம், மொழியை எப்படி பிரிப்பது ?

* மன்னர்களே, மகாவிஷ்ணு அம்சம் என்று கூறுமளவிற்கு "பாணினி" என்ற புலவர் முன்னொரு காலத்தில் இப்படி மொழிகள் ஆறு பெரும் பிரிவாக , பிராகிருத மொழிகள் என்று பிரிந்து இருந்தது அல்லவா ? அப்போது, அந்த மொழிகளை ஒற்றுமைப்படுத்தும் விதத்தில் " சமஸ்கிருதம் " என்ற மொழியினை உருவாக்கி, அதனை நிர்வாக மொழியாகவும், பயன்படுத்த தீர்வும் தந்தார்.  அம்மொழியை கணித சூத்திரங்கள் அடிப்படையில் இணைத்து அமைத்தார் அல்லவா ?  அதையே இப்போது மீண்டும் தலைகீழாக செய்யப்போகிறோம்.  அதாவது, மொழியினை இரண்டாக பிரித்து இரண்டு தேசத்திற்கும் வெவ்வேறு மொழி என்று அடையாளம் செய்து விடலாம்.  அந்த மொழியினை அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு குல குருவும், பொது மக்களுக்கு கோவில் பண்டிதர்களும் போதிப்பர்.  ஓரிரு வருடங்களில் இரு நாட்டிற்கும் வெவ்வேறு மொழியாக அடையாளம் பெற்று விடும்.  அதன் பின்னர், பேசும் மொழியை வைத்து " பிரஜையானவர் " எந்த நாட்டினை சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டுகொண்டு, அவர் எங்கு வரி செலுத்த வேண்டும், என்று ஏமாறாமல் தீர்மானித்து விடலாம்.  

* ஆனால் முக்கிய விஷயம் ஒன்று,  இந்த மொழியினை இரண்டாக உடைப்பதன் காரணத்தை ரகசியமாக வைக்க வேண்டும். இல்லையெனில் பயன் ஏற்படாது என்றார். !!

* மேலும் எதிர் காலத்தில் இரு நாடுகளும் இணைந்தால் பாணினி பயன்படுத்திய அதே சூத்திரத்தை வைத்து இரு நாட்டு மொழிகளையும் இணைத்து விடலாம் என்றார். !! ( இணைப்பதற்கான வாய்ப்பு ஆங்கிலேயர் காலம் வரை வரவே இல்லை ! ஒரு சில மொழிகளின் இணைப்பு தவிர !! )

* இரு மன்னர்களும் ஆலோசித்து, இரு நாட்டு பிரஜைகளும் தோற்றத்திலும், உடை, கலாச்சாரத்திலும் ஒரே மாதிரி இருப்பதால், எந்த நாட்டை சேர்ந்த பிரஜை என்று கண்டறிவதில் சிரமம் உள்ளதை அறிந்து, பண்டிதரின் தீர்வினை ஏற்று; 'மொழியை' இரண்டாக பிரிப்பதாக தீர்மானித்தனர்.

* பண்டிதர்களும் பாணினி கணித சூத்திரங்கள் அடிப்படையில் மொழியை கட்டமைத்து இருந்ததால், அதே சூத்திரங்கள் அடிப்படையில், '-ஒரே இரவில் புதுமொழி ஒன்று-' உருவாக்குவது எளிதானது.

* வெற்றிகரமாக பண்டிதர்கள் இதனை செய்து முடித்தனர்.  அரசுக்கு வருவாயும் பழைய நிலைக்கு திரும்பியது.! 

* இந்த மொழியினை இரண்டாக உடைக்கும் "ராஜ தந்திரம்" அதன் பின்னேற்பட்ட காலங்களில் மன்னர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் மீண்டும் ராஜ்ஜியங்கள் பிரிந்து கொண்டே இருக்க; இருக்க , மொழிகளும் பலவாக பிரிக்கப்பட்டுக்கொண்டே வந்தது.  தொடர்ந்து ! ! ! ! 

###  *ஆங்கிலேயர் காலத்தில் சௌராஷ்டிர தேசத்தில் ஓவ்வொரு 300 கிமி சுற்றுப்பரப்பளவிற்கும் ஒரு ராஷ்ட்ரம், அதற்க்கு ஒரு தனி மொழி என்ற அளவில் மொழிகளின் எண்ணிக்கை பெருகி இருந்தது.  இவைகளில் பெரும்பாலான மொழிகள் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வந்தன.  சில தேவநாகரி போன்றே இருக்கும் மோடி எழுத்து, போன்ற எழுத்துக்களிலும் எழுதி வந்தனர்.

சுதந்திரத்திற்கு பின், குஜராத் மாநிலம் உருவாக்குகையில், மாநில மொழியாக ஒரு மொழியை ஏற்க வேண்டிய நிர்பந்தம் வந்தது.  அங்கோ பலப்பல மொழியாக மன்னர் காலத்தில் இருந்து மொழிகள் பிரிந்து கிடக்கிறதே ? என்ன செய்வது ? பலப்பல மொழிகளில் எதை மாநில மொழியாக ஏற்பது ? என்ற பிரச்னை வந்தது.

* இதன் தீர்வாக, சௌராஷ்டிர பகுதியில் உள்ள கிர்னார் என்ற வட்டார மொழியினை குஜராத் மாநில மொழியாக ஏற்பது என்றும், மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு "மராத்வாடா வட்டார மொழியை" மாநில மொழியாக ஏற்பது என்றும் முடிவானது. 

* இந்த முடிவு பல வட்டார மக்களுக்கு அதிருப்தி கொடுத்தது. சில வட்டார மொழியினர், தங்கள் வட்டார மொழியினையே மாநில மொழியாக அமுல் படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.  ஆயினும், மாநில காங்கிரஸ் அரசு இதனை சர்வாதிகார போக்கில் அணுகி, மக்களிடம் குஜராத்தி மொழியை அமுல்படுத்தி விட்டது.  இதனால் சவுராஷ்டிரா வட்டார மொழிகளில் ஒன்றான கிர்னார் வட்டார மொழியே குஜராத்தி மொழி என்று பெயர் பெற்று அமல் படுத்தப்பட்டது. மராத்வாடா வட்டார மொழி மராத்தி மொழி என்று பெயர் பெற்று அமுல் படுத்தப்பட்டது. 

* மொழிகளை ஆவணப்படுத்த யுனெஸ்கோ நிறுவனம் உலக அளவில் முயற்சி எடுத்ததனை அடுத்து. 

* ஆறு ஆண்டுகளுக்கு முன் குஜராத்தின் வட்டார மொழிகலிள் பல அழிந்து விட்டது கண்டு, மோடி அரசு இந்த மொழிகளை ஆவணப்படுத்த ஆணையிட்டது.

* பத்மஸ்ரீ கணேஷ் தேவி தலைமையிலான குழுவினை அமைத்து, மாநிலத்தில் இருந்த அழிந்தது, அழியாதது உட்பட அனைத்து வட்டார மொழிகளையும் ஆவணப்படுத்த கேட்டுக்கொண்டது.  

* தமிழகத்தில் பேசப்படும் சௌராஷ்ட்ரி மொழி சவுராஷ்டிரா தேசத்தில் எந்த வட்டாரத்தில் பேசப்பட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை.  விரைவில் கிடைக்கும் என்று நம்புவோமாக.

* எழுத்து : தெஸ்வான் பாஸ்கர், சேலம். 

அனைத்து சௌராஷ்டிர மக்களும் அறிந்து கொள்ள ஒரு  ஷேர் செய்யுங்கள். நன்றி.

Saturday, January 18, 2020

வரலாற்றில் இருந்து பாடம் கற்போம்



*வரலாற்றில் இருந்து பாடம் கற்போம்* (முதலில் வரலாறு இறுதியில் பாடம்.)
(எச்சரிக்கை : கற்காவிட்டால் ஏற்படும் திடுக்கிடும் விளைவுகள் தான் பின்வரும் வரலாறு)
அஜாஜி என்ற இளைஞன் செய்த தியாகத்தால், தங்களுக்குள் இருந்த பகை மறந்து, அனைவரும் ஒன்றிணைந்து  சௌராஷ்ட்ரா சமஸ்தானங்கள் இணைந்து அக்பரின் படையை விரட்டிய வரலாறு.  :  

இந்தியாவின் குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துரோல் என்ற இடத்திற்கு  வடமேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பீடபூமி மற்றும் வரலாற்று தலம் "புச்சார் மோரி". இந்த "புச்சார் மோரி" (பவசார் மௌரி)  போர் நினைவு ஸ்த்தலம் என்று  பெயர் பெற்றது. இந்த  புகழ்பெற்ற போர் வரலாறு இதோ. 

கண்ணியம், அடைக்கலம் மற்றும் சடங்குகள் ஒன்றாகக் காணப்படும் ஒரு நாடு இந்திய நாடு.  சௌராஷ்ட்ரா சத்ரிய வீரர்கள்  தங்கள் இரத்தத்தால் இந்த நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்துள்ளனர். தங்கள் மதம் மற்றும் குடிமக்களின் நலனுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். இன்று, படிக்கப்போவது சவுராஷ்டிரா மாகாணத்தின் அத்தகைய ஒரு ஹீரோ தஞ்சம் அடைந்த அக்பரின் ஆட்சி பிரதிநிதியான சுபேராஜ்-ஐக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்த வரலாறு மற்றும் அதன் பின் விளைவுகள். 
கர்ணாவதி நகரம் முஸ்லீம் மன்னர்களின் கைக்கு சென்றது. அஹமதாபாத் என்று அந்நகரம் பெயர் மாற்றம் அடைந்தது.  (இன்னும் இந்தியாவில் அஹமதாபாத், ஹைதராபாத் போன்ற பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றால் நமது பரந்த மனப்பான்மை எவ்வளவு என்று ஏதாவது ஒரு மீட்டர் அளவு காட்டியில் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள் ) டெல்லியில் இருந்த அக்பரின் ஆட்சி பிரதிநிதியாக  சுபே ராஜ் அங்கு ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.  'சுபே' ஒரு இந்து என்பதால், மக்கள் ஓரளவு தங்கள் பிரச்சனைகளை நியாயத்துடன் தீர்த்துக் கொண்டனர். ஆனால் முகலாயருக்கு இது பொறுக்குமா ?  அக்பரின் உடன் பிறந்த சகோதரர் அஜீஸ் கோகா அகமதாபாத்தின் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்த வெறியுடன் வந்தார். முழு அதிகாரமும் அவருக்கே வேண்டுமாம் ! அதனால் அஜீஸ், ஆட்சி பிரதிநிதி  சுபே ராஜ்-ஐ  கொன்ற பிறகு மாகாணத்தின் அரியணையில் அமர விரும்பினார். சுதாரித்துக் கொண்ட சுபே ராஜ்,  தன் கட்டுப்பாட்டில் இருந்த அகமதாபாத் மாகாண படையுடன், அருகில் இருந்த  சௌராஷ்ட்ரா சமஸ்தானமான  "நவநகர்" படையின்  பாதுகாப்பில் தஞ்சம் புகுந்து தப்பினார். 

யார் இந்த நவநகர் சமஸ்தானம் ?  நவநகரின் மன்னர் " ராஜ்வி ஜாம் சத்ரசால்ஜி ". மக்களால் அவர் " ஜாம் சடாஜி " என்று அழைக்கப்பட்டார். ஜாம் சடாஜி,  அக்பரின் சகோதரரான அஜீஸ் கோகாவினால கொல்லப்படுவோமே என்ற மரண பயத்தில் இருந்த சுபேராஜ்-ற்கு அடைக்கலம் கொடுத்தார். 

அங்கும் தன் மூக்கை நுழைத்த  அஜீஸ், ஜாம் சடாஜி அவர்களிடம்  "சுபே ராஜ்" ஐ தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்பரின் சகோதரர் அஜீஸ் கோகா  கோரினார்.  ஆனால் சரணடைந்தவர்களை திரும்ப ஒப்படைப்பது ராஜபுத்திர வீர மரபிற்கு எதிரானது. சுபேராஜ் ஐ ஒப்படைக்க முடியாது என்கிறார். போர் மூளும் சூழ்நிலை உருவானது.  எனவே, போருக்கு முழு தயாரிப்புகளையும் ஜாம் சடாஜி செய்ய துவங்கினார். 

அஜீஸ் கோகா தலைமையில் சவுராஷ்டிராவைக் கைப்பற்ற டெல்லி அக்பரின் இராணுவம் நின்றது. இவ்வளவு பெரிய இராணுவத்திலிருந்து தனது ராஜ்யத்தை காப்பாற்ற, ஜாம் சடாஜி "துரோலுக்கு" அருகிலுள்ள "பூச்சார் மோரி" என்ற இடத்தில் போராட முடிவு செய்தார். ஜாம் சடாஜி உதவிக்காக நண்பர்களை போருக்கு வர அழைத்தார்.

ஜாம் சடாஜி யின் நண்பர்களான,  பாபியின் இராணுவம் ஜுனகத்திலிருந்து வந்தது, கரேடி-விர்பூரைச் சேர்ந்த லோமோ கும்மான் தனது படையுடன் வந்தார், பூஜ்-ன்  ராவ் காட்ஜி தனது படையை அனுப்பினார், மெஹ்ரமான்ஜி வந்தார். ஜாம் சாந்தாஜி தனது இராணுவத்தை டெல்லி அக்பர்  இராணுவத்திற்கு  எதிராக அழைத்து வந்தார். ஜாம் சடாஜி யுடன் கை கோர்த்தனர். 

அஜீஸ் கோகா மீண்டும் போருக்குப் பதிலாக சுபே வை ஒப்படைக்க அரசைக் கேட்டுக் கொண்டார், ஆனால் ஜாம் சதாஜி மறுத்தார். யுத்தம் தொடங்கியது, யுத்த துவக்கத்தில் ராஜபுத்திரர்கள் சரிந்தனர்.  மேலும் போர் முரட்டுத்தனமாக உருவாகத் தொடங்கியது, முஸ்லீம் இராணுவம் கலைக்கப்பட்டது, ராஜ்புத் வீரர்கள் கஜ்ராமுலி போன்ற எதிரிகளை வெட்டத் தொடங்கினர். போர்க்களத்தில்  "ஹர் ஹர் மகாதேவின்" எதிரொலி தீவிரமடையத் தொடங்கியது, கழுகுகள் பறவைகள் பிணம் தின்ன சுற்றி வரத் தொடங்கின, போர்க்களம் போர்வீரனின் இரத்தத்தில் நிறையத் துவங்கியது. 
மகாதேவ் சிவன் தனது அணிமாலையான ருண்டமாலாவுக்கு தலையை எடுக்கத் தொடங்கினார்.  இந்த நல்ல நேரம் நீடிக்கவில்லை ! 
ராஜபுத்திரர்களுக்கு மோசமான நேரம் இருந்தது. அஜீஸ் கோகா ஜாம் சதாஜியுடன் சமரசம் செய்யவிருந்தார்.  இதனை அறிந்த ஜாம் சடாஜி யின் நண்பர்கள் லோமா கும்னாவும் பா3பி3யும், "ஒருவேளை  ஜாம் சமரசம் செய்து கொண்டால், அக்பரின் படையை வென்றதால் தங்களின் சமஸ்தானம் மீதும் ஆதிக்கம் செலுத்த துவங்கி விடுவார் என்று பயந்தனர் !! " தங்களது ராஜ்யம் சிக்கலில் இருக்கும் என்று நினைத்தனர். !! எனவே அக்பரின் சகோதரர் அஜீஸ்க்கு  ​​நாங்கள் இருவரும் உங்களுடன் சேருகிறோம்  என்று ஒரு செய்தி குறிப்பை அனுப்பினர்.!! ( இது நம்முடனே இருந்து சுயநலம் காரணமாக அந்நியர் ஆட்சிக்கு அடிகோலும் கும்பல்) 

போரின் முடிவு உறுதியாக இருந்தது. லோமோ குமன் மற்றும் ஜுனகத் பாபி ஆகியோர் அஜீஸுடன் தங்கள் படைகளை இணைத்தனர் ! இந்த பக்கத்தில் ஜாம் சடாஜியின்  இராணுவம் குறைக்கப்பட்டது, ஜாம் சடாஜியின் வெற்றி தோல்வியாக மாறத் தொடங்கியது. ஜாம் சடாஜி தனது அரச குடும்பத்தை பாதுகாக்க முக்கியமான சிலரை மீண்டும் நவநகருக்கு அனுப்பினார். 

போர் விவரங்கள்  விஷயம்  ஜாம் சதாஜியின் மகன் *குன்வர் அஜாஜிக்கு* அவரின் விவாஹம் ஏற்கனவே நிச்சயித்தபடி நவநகரில் நடந்து கொண்டு இருந்த போது,   போர்க்களத்தில் இருந்து திரும்பிய தனது குடும்பத்தினர் மூலம் அறிந்து கொண்டார்.  நட்பு சமஸ்தானங்களின் துரோகத்தை கண்டு வெண்குண்டான் இளைஞன் அஜாஜி. 

முகூர்த்த லக்கினம் நெருங்கிக்கொண்டு இருந்த போது, விவாகத்தை பாதியில் நிறுத்திவிட்டு குன்வர் அஜாஜி  போர்க்களம் நோக்கி வேகமாக பயணம் செய்து கொண்டிருந்தார் !!!   இளவரசர் குன்வார் அஜாஜி மற்றும் லக்னத்தில் ஈடுபட்ட 500 விருந்தினர்களுடன் போர்க்களம் வந்தார், லக்கினத்தின் பெரேவை (பெ2ரால்)  நடுவில் விட்டுவிட்டார். அவரின் வருகை போர்க்களத்தில் முரட்டுத்தனத்தை உருவாக்கியது. அவரது வீரம் மிக்க சண்டையைப் பார்த்தபோது, ​​ராஜபுத்திரர்களிடையே மீண்டும் மகிழ்ச்சியும் வீரமும் ஏற்பட்டது. சாதாரண வீரர்கள் கூட மேலும் மேலும் அக்பரின் படைகளை வெட்டத் தொடங்கினர்.

குன்வர் அஜாஜி யானை மீது அமர்ந்து போரிடும் அக்பரின் சகோதரர்  அஜீஸைக் கண்டார். பார்த்ததும், அவர் தனது குதிரையை யானையின் தந்தத்தில் மோத விட்டார்.  இதனால் யானையில் இருந்து குதித்த அஜீஸ்-ஐ   அஜாஜி தனது ஈட்டியால் அடித்தார் தாக்குதலை எதிர்பாராத அஜீஸ் மறைந்து ஒளிந்து கொண்டார். ஆனால் அவரது மெய்க்காப்பாளர்கள் அஜாஜியைத் தாக்கினர். ஒரு சதி திட்டத்துடன், அஜாஜி-ஐ திறந்தவெளி  போர்க்களத்தில் இருந்து அஜீஸ் ஒளிந்து இருந்த தூரத்தில் இருக்கும் கட்டடம் நோக்கி மெய்க்காப்பளர்கள் அஜாஜியை நகர்த்திக்கொண்டு சென்றனர்.  இறுதியில் அனைவரும் அஜாஜியினால் வீழ்த்தப்படுவதற்கும்   கட்டடத்தை அடைவதற்கும் சரியாக இருந்தது ! ஒளிந்து வந்த அக்பரின் சகோதரன் அஜீஸ் கோகா  முதுகுப்புற கோழைத்தன தாக்குதலுக்கு அஜாஜியை இலக்காக்கினார். இளவரசன் அஜாஜி திருமண நாளில் கொல்லப்பட்டார். 

கோபால் பரோட்  என்பவர் அஜாஜியின் வீரம் குறித்து அவரது மனைவியாக ஆக இருந்த சுர்ஜா குவர்பாய்-யிடம் கூறினார். எனவே அஜாஜியின் வருணால மனைவியாக  இருந்த, சுர்ஜாகுவர்பாய்,   "  சத் சதா, ஜெய் அம்பே ஜெய் ஆஷாபுரா மாதா, என்று கோஷமிட்டு கொண்டே தேரில் ஏறி போர்க்களத்திற்கு புறப்பட்டார். .

முஸ்லிம்கள் அவரது தேரை நிறுத்த முயன்றனர்.  ஆயின் சுர்ஜா  குவர்பாய் போர்க்களத்திற்கு தான் மணக்க இருந்த அஜாஜிக்கு ஆதரவாக புறப்பட்டது பலரை சிந்திக்க வைத்தது. தனது குடும்ப பகை காரணமாக ஜடேஜா வம்சம் இப்போரில் ஜாம் சதாஜியின் அழைப்பை ஏற்க மறுத்து போரில் பங்கேற்கவில்லை ! 

ஆயின் இளம்பெண்ணான இளவரசி சுர்ஜா  குவர்பாய் திருமண நாளில் போரில் இறந்த தனது வருங்கால கணவனுக்காக தானும் போர்க்களம் புகுவதை கண்ட ஜடேஜா மன்னர் துணுக்குற்றார். ஒரு இளம் பெண்ணுக்கு இந்த நிலைமையா என்று திடுக்கிட்டார். 

தனது தவறை உணர்ந்தார்  த்ரோலின் சமஸ்தானத்தின் மன்னர் ஜடேஜா. குடும்ப பிளவு காரணமாக தாம் போரில் பங்கேற்கவில்லை என்றும், ஆனால் ராணியின் தேர் முஸ்லிம்களால் தடுக்கப்பட்டது என்று நான் கேள்விப்பட்டபோது, ​​நான்  குடும்ப வேறுபாடுகளை மறந்து முஸ்லீம் படையை எதிர்க்க போகிறேன் என்று கூறினார். 

மேலும் ராணி சூரஜ்குவர்பா, போருக்கு செல்லும் முன்னரே அஜாஜியின் நெற்றியை தனது மடியில் வைத்து சத்தியம்  செய்திருந்தார். என்ன சத்தியம் ? இந்த போரில் அஜாஜி இறந்தால் தானும் போர்க்களம் புகுந்து வீர மரணம் எய்துவேன் என்று. !! இந்த வழியில், புச்சார் மோரியின் போர் சவுராஷ்டிராவின் பானிபட் என்று அழைக்கப்படுகிறது, குஜராத்தின் வரலாறு மிகப் பெரியது, ஆனால் இந்த போர் கடைசி பெரிய போராக மாறியது.

ஜடேஜா படை போர்க்களம் புகுவதை அறிந்த அக்பர் தாமே போரில் பங்கேற்றார். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாட்டின் புதிய தலைமுறை இந்த துணிச்சலான போர்வீரரைப் பற்றி கற்பிக்கப்படவில்லை, சொல்லப்படவில்லை! மன்னர் ஜடேஜா அக்பர் படையை மோசமாக தோற்கடித்து துரத்தினார். அதே போல் அவரது 52 யானைகள், 3530 குதிரைகள், பாலாக்கியா போன்றவற்றை தனது வசமாக்கினார். 

ஜடேஜா லட்சக்கணக்கில் இருந்த அக்பர் படையை, முகலாயர்களின் முந்தைய விதிமீறும் தந்திரோபாயத்தால், ஹிந்துஸ்தானத்தை பிடித்ததது போல, தாமும், நள்ளிரவில் தனது வீரர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, அக்பரின் படையை வெட்ட துவங்கினார்.  ஒரு கட்டத்தில் அக்பர் பின் வாங்கி ஓடினார். 

சிறிது நாட்கள் கழித்து அக்பர் பழிவாங்கும் நோக்கத்துடன் 1639 இல் மீண்டும் வந்தார், ஆனால் இந்த முறையும் அவர் "தமாச்சன் போரில்" மீண்டும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது! இந்த யுத்தத்தை குஜராத்தின் பல வரலாற்றாசிரியர்கள் தங்கள் புத்தகங்களில் விவரித்திருக்கிறார்கள், அவற்றில் முக்கியமானவை - சவுராஷ்டிரா வரலாற்றின் ஆசிரியர் நர் பததர் நீப்ஜே, சம்புபிரசாத் தேசாய், பம்பாய் அரசு வெளியிட்டுள்ள பம்பாய் கெஸெடேரியம், விபா விலாஸ், யதுவன்ஸ் பிரகாஷ் என்ற புத்தக ஆசிரியர்  மவ்தன் ஜி.ஆகியோரின் வெளியீடுகளில் இந்த வீரப்போர் விவரிக்கப்பட்டுள்ளது!

*பாடம் :* எனவே குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளியுங்கள்.  உங்கள் எதிரி உங்களை சுற்றி உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.  நீங்கள் மெஜாரிட்டி ஆக இருக்கும் வரை தற்போது இருக்கும் நிம்மதியான வாழ்க்கை நீடிக்கும்.  

இப்போதே ஏதோ பழங்கால வரலாறு போல, கன்யாகுமரியில் " போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்சனை " கொன்று ட்ரயல் பார்த்து விட்டார்கள் முஸ்லீம் தீவிரவாதிகள்.  இந்து இயக்க தலைவர்களை கொன்று முன்னோட்டம் பார்த்து விட்டார்கள்.  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் என்றால் ஏதோ தொலைதூரத்தில் இராக்கில், சிரியாவில் தான் இருக்கும் என்று நினைத்து இருந்தோம்.  ஆனால் இஸ்லாம் அதை இந்தியாவிற்கும் இறக்குமதி செய்து விட்டது.  இஸ்லாம் மற்ற மதத்திற்கு எதிராக நல்ல கருத்துக்களை சொல்லுவதை இது வரை யாரும் கேட்டது இல்லை.   அங்கு சீர்திருத்த வாதிகள் உருவாகவில்லை.  உஷாராவோம். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிப்போம். இல்லாவிட்டால் இந்த கதையில் வருவது போல, யாரோ ஒருவர் தனது தங்கை, தம்பி, உற்றார் உறவினருக்காக இந்த காலத்திற்கு ஏற்றபடி சண்டை செய்யும் நிலைமை ஏற்படும்.  இக்காட்சியையே இருபதாம் நூற்றாண்டில் காஷ்மீரில் ஏற்கனவே பார்த்து விட்டோம்.