Friday, November 3, 2017

சவுராஷ்டிரா அரசு - ஒரு நினைவு



சவுராஷ்டிரா சமஸ்தானங்கள் இணைந்து " யுனைடெட் ஸ்டேட் ஆப் சவுராஷ்டிரா " என்ற அரசை அமைத்து இருந்தனர்.   இது ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படாமல், தனித்து நிர்வகிக்கப்பட்ட அரசு.  இவ்வரசில் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பகவான் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவராகா பகுதியும் ஒன்று.  துவாரகாவில் இருந்து 20 கி மீ தொலைவில் உள்ள ஜாம்பவதி என்ற குகை உள்ளது.  இந்த குகையில் ஜாம்பவான் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.  ராமாவதாரத்தில் ராமருக்கு உதவி செய்த ஜாம்பவான் க்ரிஷ்ணாவதாரத்தில் அவருடன் போர் செய்யும் நிலை ஏற்பட்டது.  இதற்கு காரணம் " சியமந்தக மணி " என்ற இருளில் ஒளிரும் மணி ஆகும்.  இதனை கிருஷ்ணர் அபகரித்து விட்டார் என்ற வதந்தி பரவியது.  இந்த அபவாதத்தை போக்க கிருஷ்ணர் சியமந்தக மணியை தேடி அலைந்தார்.  அது ஜாம்பவான் குகையில் ஜாம்பவானின் குழந்தையின் தொட்டிலில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தது.  மணியை எடுக்க குகைக்குள் சென்ற கிருஷ்ணருக்கும் ஜாம்பவானுக்கும் போர் ஏற்பட்டது.  இறுதியில் ராமரே கிருஷ்ணராக அவதரித்து உள்ளார் என்று உணர்ந்த ஜாம்பவான்,  சியமந்தக மணியை அவரிடம் ஒப்படைத்தார்.  தனது மகள் ஜாம்பவதியை விவாகம் செய்து தந்தார்.  இந்த குகை " சவுராஷ்டிரா அரசு (GOVERNMENT  OF  SAURASHTRA ) இன் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.  தற்போது குஜராத் மாநில தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த செய்தி திருச்சி இல் இருந்து வெளி வரும் "சவுராஷ்டிரா சமூக குரல் " பத்திரிக்கையிலும் நவம்பர்  2017   பதிப்பிலும் வெளியாகி உள்ளது .