Saturday, October 30, 2010

Sourashtra Lipi Declared by - CIIL & Sourashtra Community



With the guidance of Central Govt. of India's Central Institute of Indian Language, Mysore, our minority language Sourashtra's Lipi / script / alphabet / akshar is declared in a grand function at Palayankottai on
08-08-2009.


Speech video of Speaker of Tamil Nadu Assembly Mr. Aayudaiyappan, MLA.

Mr. Maideen Khan, Minister of Sports and Culture of Tamil Nadu, Sourashtra Madhya Saba President. Mr. Bhajji. Radhakrishnan, Ex. President, Mr. Tulasiram, Ex. Secretary. Mr. Santharam, CIIL Officials, Mrs. Rajya Sri, Additional Director, Mr. Subba Krishna, CIIL are present at stage.

Friday, October 15, 2010

Bhava... ! ப4வா...! भवा...

ப4வா - என்ற சௌராஷ்டிர வார்த்தை -
சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இந்த வார்த்தையின் அர்த்தம் பல புதிய விளக்கங்களை தரும். 
பொதுவாக சௌராஷ்டிரர்கள் அனைவரும் ஆண்களுக்கான விளிச் சொல்லாக இந்த ' ப4வா ' என்ற வார்த்தையை உபயோகிப்பர்.  மேலும் தங்கள் உடன் பிறந்தவளின் கணவனையும் ' ப4வா' என்று அழைப்பர்.

' ப4வ  ' (Bhavaa ) என்ற  வார்த்தை, ' ஆகியவனே '  என்று பொருள் தரும்.  ' தீ3ர்க்க சுமங்கலி ப4வ' என்றால் நெடுநாள் கணவனுடன் இருக்கும்படி ஆகுக ' என்று பொருள். 

இதை விரிந்த பொருளில் நோக்கும்போது; ' சரவண பவ ' என்ற சடாக்ஷர மந்திரத்தில் உள்ள - பவ - என்ற சொல் எப்படி பொருள் தருகிறது?

" சரவண - என்று ஆகியவனே ! 

அதாவது, சரவண என்ற பொய்கையில் உருவாக ஆகியவனே  - என்று !
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம் பொருள் ' ப4வம் ' என்கிற இந்த உலகாயும் ஆகியவன் ! மேலும் அந்த ' பவம் ' என்று குறிப்பிடப்படும் இவ் உலகில்
 ' சரவண '  என்ற உருவாய்; சரவண என்ற பெயரில்  பிறந்தவனே ! என்று பொருள் தருகிறது சடாக்ஷர மந்திரம். 

ஆக ' ப4வ ' என்று ஒருவனை பார்த்து நாம் விளித்தால், அது இந்த உலகில் உரு ஆகியவனே - உரு எடுத்து வந்தவனே ... என்று பொருள்.

சிவனுக்கும் ' பவன் ' என்று ஒரு பெயர் உண்டு .

இந்த ' பவ ' என்ற சௌராஷ்டிர வார்த்தை, நமது ஆழ்ந்த ஆத்மிக ஞானத்தை குறிப்பிடுகிறது.   ' ப4வண் ' என்ற சௌராஷ்டிர வார்த்தையை நாம் ' பிராமணர்' களை குறிக்கும் சொல்லாக உபயோகப் படுத்தினாலும் , ' பிராமணன்  ' என்ற வார்த்தையின் பொருள் என்ன? ' பிரம்மமாக ஆகியவன் '  !

 பிரம்மம் என்றாலே அதற்க்கு உருவம் கிடையாது.  எனவே சௌராஷ்டிர மொழியில் நாம் உபயோகப் படுத்தும் ' பவ' என்ற வார்த்தை -  ' பிராமண ' என்ற வார்த்தைக்கு நிகர்-அல்ல என்பது மட்டும் அல்ல, அதற்க்கு நேர் எதிரான பொருள் கொண்டதும் கூட !  ஆயினும் நாம் ' பவண்' என்ற வார்த்தயை பிரமணர்களை குறிக்க உபயோகப் படுத்துகிறோம் ! உருவம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லாம் ஒன்று தான் என்கிறீர்களா ? அதுவும் சரிதான் !