நம் பங்குக்கு சௌராஷ்டிர மொழியில் ராமாயணமும் மகாபாரதமும் எழுதி விட்டோம். வாழ்க சௌராஷ்டிர மொழி. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தங்களின் அடையாள பெருமை பேச தனி மொழி, தனி எழுத்து . இதையே நாம் பல நூற்றாண்டுகளாக திரும்ப திரும்ப செய்து கொண்டு இருப்பதால், அறிவியல் துறை போன்ற துறைகளில் மேற்கத்தியர்கள் போல் நாம் பிரகாசிக்கவில்லை. சரிதானே ?
திறன் வீணடிப்பா ? புண்ணியம் சேர்ப்பா ?
நம் பங்குக்கு சௌராஷ்டிர மொழியில் ராமாயணமும் மகாபாரதமும் எழுதி விட்டோம். வாழ்க சௌராஷ்டிர மொழி.
பரந்த பாரத தேசத்தின் வரலாற்றை ஆராய்வது மிக பெரிய பணி. இலக்கிய வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அணுகினால், இந்த ஆய்வு ஓரளவு எளிமையாகிறது. சமஸ்கிருதம் தோன்றும் காலத்திற்கு முன் பேசப்பட்ட மொழிக்கு பெயர் இல்லை . பொதுவாக ' பாஷா " என்று பெயர். இங்கிருந்து ஆரம்பித்து இலக்கியம் படைக்கப்பட்ட வரலாற்றை காணின், அது 'பாஷா' என்ற மொழி எப்படி 'சமஸ்கிருதம்' என்ற பெயர் அடைந்தது, சமஸ்கிருதத்தில் இருந்து, பிற 'இந்திய மொழிகள்' எவ்வாறு தோன்றின என்பதும், அதிலிருந்து இன்று நாம் பேசும் மொழி வரை ஒரு மொழியின் வம்சாவளி படம் அறிஞர்களால் போடப்பட்டு நிரூபிக்கப்பட்டு விட்டது. இதில் எழுத்தின் வரலாறும் அவ்வப்போது இணைந்து கொள்கிறது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்களின் மொழி மாறி அமைவது ஒரு சீரான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கிறது. மொழியியல் அறிஞர்களும் இதனை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.
ஒரு காலகட்டத்தில் சம்ஸ்கிருதம் இருந்தது, அதில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. காலப் போக்கில் சமஸ்கிருதத்தில் இருந்து பல மொழிகள் பிறந்தன.
சமஸ்கிருதத்தில் இருந்து பல மொழிகள், இலக்கியம் படைக்க " கரு " கிடைக்காமல் அவதியுற்று சம்ஸ்கிருத இலக்கியங்களை தனக்கு ஏற்றவாறு அந்தந்த கால கட்டத்தில் மக்கள் பேசிக்கொண்டு இருக்கும் மொழிக்கு ஏற்றவாறு படியெடுத்து மாற்றி எழுதி தங்களின் மொழிக்கு சொந்தமான புலவர்களை / பண்டிதர்களை உருவாக்கி கொண்டது. இதில் ஆன்மிக இலக்கியங்கள் தான் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளப்பட்ட கருத்து. ஏன் எனில், தங்களது மொழியும் " தெய்வீகமானது " என்று நிரூபிக்கவும், தெய்வ நம்பிக்கை கொண்ட பாரத மக்களிடம் உளவியல் ரீதியாக சென்று சேரவும் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் அரசியல் நிர்வாக ரீதியான காரணமும் இருந்தது.! அரசர்களுக்கு தங்கள் பிரஜைகள் யார் என்பதை அடையாளம் காண, மொழியை பயன்படுத்தினர் !
எப்படி ?
தங்களின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளில் வாழ் மக்களை, "பேசுமொழியை" குறிப்பிட்ட விதத்தில் மாற்றி அமைத்து பேச செய்வது, அல்லது எழுத்துருவை மாற்றி எழுதுவது போன்ற " தந்திரோபாயங்களால் " நிர்வாக திறமையை வெளிப்படுத்தினர். !!!
இதில் அரசியல் நிர்வாக ரீதியான காரணமும் இருந்தது.! அரசர்களுக்கு தங்கள் பிரஜைகள் யார் என்பதை அடையாளம் காண, மொழியை பயன்படுத்தினர் !
எப்படி ?
தங்களின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளில் வாழ் மக்களை, "பேசுமொழியை" குறிப்பிட்ட விதத்தில் மாற்றி அமைத்து பேச செய்வது, அல்லது எழுத்துருவை மாற்றி எழுதுவது போன்ற " தந்திரோபாயங்களால் " நிர்வாக திறமையை வெளிப்படுத்தினர். !!!
இப்படியே காலம் சென்று விடுமா ? வெளிநாட்டு படையெடுப்பின் போது, அவர்களின் மொழி நம்மிடையே திணிக்கப்பட்டது. மக்கள் தொகை பெருக பெருக, மொழிகளின் எண்ணிக்கையும் அதிகமாக தொடங்கியது. இது கிட்டத்தட்ட ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை, மொழி அடையாளம், சாதி அடையாளம், உள்சாதி அடையாளம், உள்சாதியில் மேலும் மேலோர், கீழோர் என்ற அடையாளம் என்று நாம் செய்து கொண்ட அடையாள பிரிவினைக்கு அளவே இல்லை.
எந்த மொழி வரலாற்றை எடுத்து கொண்டாலும், பிராகிருத மொழிகள், பாலி மொழி முதல் சௌராஷ்டிரா மொழி வரை, அனைத்து மொழி பண்டிதர்களும் சம்ஸ்கிருத இலக்கியத்தை மொழி பெயர்த்து, ராமாயணம் தங்களின் மொழியில் உள்ளது, மகாபாரதம் தங்கள் மொழியில் உள்ளது என்று பெருமை பேசிக்கொள்கின்றன.
ஒரு வட்டார மொழியில், அந்த மக்களின் எந்த அறிவு திறமும், அவர்களின் மொழியில் படைக்கப்படாமல், பழைய இலக்கியங்களை நம்பி அடித்தளமிட்டு இருப்பது எதனை காட்டுகிறது ? எல்லா மொழிப் பண்டிதர்களும் ராமாயண , மகாபாரதங்களை எழுதி கொண்டு இருப்பது திறன் வீணடிப்பா? புண்ணியம் சேர்ப்பா? என்று தெரியவில்லை. நம் பங்குக்கு சௌராஷ்டிர மொழியில் ராமாயணமும் மகாபாரதமும் எழுதி விட்டோம். வாழ்க சௌராஷ்டிர மொழி. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தங்களின் அடையாள பெருமை பேச தனி மொழி, தனி எழுத்து . இதையே நாம் பல நூற்றாண்டுகளாக செய்து கொண்டு இருப்பதால், அறிவியல் துறை போன்ற துறைகளில் மேற்கத்தியர்கள் போல் நாம் பிரகாசிக்கவில்லை.
மொழி வளர்ச்சி என்ற பெயரில் நாம் திறன் வீணடிக்கிறோமா ? அல்லது ஆன்மிக இலக்கியங்களை மொழி பெயர்த்து புண்ணியம் சேர்க்கிறோமா ?